Advertisement

டில்லி பரிசோதனை முறை: முதல்வருக்கு ஸ்டாலின் ஆலோசனை

Share
சென்னை: 'டில்லி அரசின், 'செரலாஜிக்கல் டெஸ்ட்' எனப்படும், குருதி நீரியல் பரிசோதனை முறையை, தமிழகத்திலும் கடைப்பிடிக்க, முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
அடித்தட்டு மக்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உயிரூட்டும் வகையில், ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். ஊரடங்கு கால மின் கட்டணத்தை, உடனே குறைக்க வேண்டும். ரேஷன் கடைகள் வாயிலாக, அனைவருக்கும் முக கவசங்களை இலவசமாக வழங்க வேண்டும்.


பல்கலைக்கழக பருவத் தேர்வுகளை ரத்து செய்து, அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். களப் பணியாளர்களாக விளங்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீஸ் துறையினர் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அளிக்க வேண்டும்.
கொரோனா நோய் பாதிப்புக்கு உள்ளான களப் பணியாளர்கள் அனைவருக்கும், அரசு அறிவித்த நிதியை, உடனே வழங்க வேண்டும். கொரோனா சோதனை குறித்த விபரங்களை, மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட வாரியாக வழங்க வேண்டும்.


கொரோனா சமூக பரவல் ஆகி விட்டதா, இல்லையா என்பது பற்றி, தெளிவான அறிக்கை பெற, தொற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கொண்ட தனிக்குழு நியமிக்க வேண்டும்.
விடிய விடிய ஆலோசனைகளை கேட்டு, 'பல்டி' அடித்து விட்டு, ஊடகங்கள் முன், 'ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்' என, வழக்கம் போல கூறக் கூடாது.
இந்த ஆலோசனைகளை காது கொடுத்து கேட்டு, முதல்வர் இ.பி.எஸ்., உடனே செயல்படுத்த வேண்டும்.டில்லி அரசு, குருதி நீரியல் பரிசோதனை முறையில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் அனைவரையும், விரைவில் கண்டறிய, தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதுபோன்ற பரிசோதனை முறையை, தமிழகத்திலும் கடைப்பிடிக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (36)

 • unmaitamil - seoul,தென் கொரியா

  இந்த பிட்டு, டோபா தலை கூட யோசனையெல்லாம் சொல்லுது. எங்க இன்னொருதடவ பிட்டே பாக்காம சொல்லு. ஜோக்கடிக்காம தள்ளி உக்காரு சொடலை .....

 • Pats - Coimbatore,இந்தியா

  வேண்டுகோளுக்கும் ஆலோசனைக்கும் வித்யாசம் தெரியாத ...

 • Pats - Coimbatore,இந்தியா

  (செந்தில்-கவுண்டமணி கேள்வி பதில்): குருதி நீரியல் பரிசோதனை முறைனா என்னண்ணே? ரத்தத்துல தண்ணியவிட்டு கலக்கி குடிக்கணுமாம்னே? அடேய் மாங்கா மடையா, அதெல்லாம் ஒனக்கு புரியாதுடா. பீகார்ல இருந்து பிரசாந்த்கிஷோர்னு ஒரு தமிழ் அறிஞர் அறிவாலயம் வந்திருக்கார். அவரு மூளைல மொளைச்ச அறிவுடா. தேங்கா மண்டையா.

 • Ganesan Madurai -

  அதுசரி

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  எதிர்கட்சி தலைவரின் ஆலோசனையை அரசு பரிசீலனை செய்யலாம்.. ஆனால் பிரசாத் கிஷோர் போன்ற கார்ப்பரேட் ஆலோசகரின் யோசனையை கேட்பது தவறு..அது பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாக மட்டுமே கொண்டிருக்கும்..அந்த கம்பெனியின் கீழ் வாழ்ந்து வரும் இவருக்கு என்ன அறிவு உள்ளது.....அறிவு இருந்தால் எதற்கு.....பிரசாத் கிஷோர்......

Advertisement