பிளாஸ்டிக் தடுப்புச்சுவர் குன்னுாரில் பணி தீவிரம்
குன்னுார் : தென் மாநிலங்களில் முதல் முறையாக , குப்பை குழியில் சேரும் வீணான பிளாஸ்டிக் பயன்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி குன்னுாரில் துவங்கியது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சியின், 30 வார்டுகளில் இருந்து, குப்பைக் குழிக்கு, வரும் பிளாஸ்டிக் உட்பட குப்பை, நகராட்சியுடன் இணைந்து 'கிளீன் குன்னுார்' அமைப்பு சார்பில், மட்கும், மட்காத குப்பையாக தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.மேலும், பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு, தயார்படுத்த 'பேலிங்' இயந்திரத்தால், பிளாஸ்டிக் பொருட்ள் 'கம்ப்ரஸ்' செய்து பேக்கிங் செய்யப்படுகிறது. இவை, பர்னஸ் ஆயில் தயாரிக்க ஐதராபாத் அனுப்பப்படுகிறது. மேலும், குன்னுார் உழவர் சந்தை அருகே, பிளாஸ்டிக் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி துவங்கியது.ஏற்பாடுகளை செய்து வரும் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ரகுநாதன் கூறுகையில்,''தடுப்புச் சுவரை அமைப்பதில், கற்களுக்கு பதிலாக, 200 கிலோ எடை கொண்ட, 'கம்ப்ரஸ்டு பிளாஸ்டிக் ஸ்லாப்' தயாரிக்கப்படுகிறது.
பின், சிமென்ட் பூசி, கம்பி வலைகளை கட்டி அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணி துவங்கியுள்ளது. ஏற்கனவே, மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், இது போன்று பிளாஸ்டிக் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!