Advertisement

போர் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன மூத்த ராணுவ தளபதிகள் பேச்சு

Share
புதுடில்லி: இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, இரு நாடுகளை சேர்ந்த மூத்த ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கிழக்கு லடாக்கில் நிலவி வரும் பதற்றத்தை குறைக்க, இச்சந்திப்பு லடாக்கில் மே 22 மற்றும் 23 தேதியில் நடந்துள்ளது. டில்லி மற்றும் பீஜிங்கில் அமைதி தீர்மானத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக்கில் உள்ள பங்கோங் தசோ ஏரி மற்றும் கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா இடையே ராணுவ பதற்றம் குறையவில்லை. இரு நாட்டு ராணுவ தளபதிகள் லடாக்கில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நியைில், இந்த பிரச்னையை சமாளிக்க இரு நாட்டு தலைநகரங்களிலும் ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா அமைதியை விரும்பிய போதும், நாட்டின் நிலப்பரப்பை பாதுகாக்க, எல்லையில் சமரசம் செய்து கொள்ளாது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கு இடையில் 5 சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், எல்லையில் ராணுவ பதற்றம் குறையவில்லை. மே 5ம் தேதி, இரு நாடுகளின் படையினருக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, எல்லையில் ராணுவ பலத்தை இரு நாடுகளும் அதிகரித்து வருகின்றன. சுமூகமான தீர்வு ஏற்படும் வரை, ராணுவ தளபதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மே 5ம் தேதி சுமார் 250 இந்திய மற்றும் சீன வீரர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் தடியடிகளுடன் மோதினர். இதில் இருபுறமும் பல வீரர்கள் காயமடைந்தனர். லடாக்கில் உள்ள கால்வன் நதி பகுதியில், இந்தியா சாலை அமைப்பதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது அந்த சாலையின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Sharvintej - madurai,இந்தியா

  நம்ம ஊர் சுடலை தளபதி இடம்பெறுவாரா ?

 • C.Elumalai - Chennai,இந்தியா

  1962 இல் சீன அதிபருடன் நேரு சந்திப்புக்கு பிறகுதான்,யுத்தத்தின் மூலம் இந்தியாவின் பலசதுர கிமி நிலத்தை, ஆக்கிரமித்தது சீனா. ஆசியஜோதி நேரு அந்த இடம் மாடு ஆடு மேய்க்க முடியாத இடம் என்று போனால் போகட்டும் என்றுதன் கையாலாகாத திறமையை காட்டினார்.இப்போ மோடிஜி இந்தியாவிடம் வாலாட்டினால்,வாலை ஒட்ட நறுக்கிவிடுவார். எங்கே இத் காங் ஆட்களுக்கு இது தெரியபோகுது.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ஞாபகப் படித்திடீங்க.. இன்னைக்கு அவரது நினைவுநாள்..

  • Anandan - chennai,இந்தியா

   அடேய், அன்னைக்கு நம்மிடம் ஆயுதம் இல்லை இன்னைக்கு ஆயுதம் இருந்தும் அமைதி. சும்மா கம்பு சுத்தாதீங்க.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  இப் பிரச்னையை கையாளத் தெரியாத ஆசிய ஜோதியின் இறந்த தினம் இன்று.

  • Anandan - chennai,இந்தியா

   இன்னைக்கும் அதே நிலைதான் சும்மா வெறும் வாயில் பந்தா காட்டினா சரியாகிடுமா? அன்றைக்கு அமெரிக்கா சீனா பக்கம் இன்றைக்கு நம் பக்கம் அது ஒன்றுதான் நல்ல விஷயம்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  போர் பதற்றம் என்பது அங்கு நின்று பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும், ஒவ்வொருவரின் மனதில் அந்த நேரத்தில் நிலை கொண்டு இருப்பது தேசிய கோடி பாரத நாடு, அங்கு மொழி, ஜாதி, மதம் அறவே இருக்காது, தூக்கம், பசி, தாகம் எல்லாம் மறந்து போகும், எந்நேரமும் விழுப்புணர்வு , அதைவிட மரியாதை, வயதில் குறைந்தவராக இருந்தாலும் அவரது பதவிக்கு மதிப்பு அளித்து அவர் கூறும் வார்த்தைகளை கேட்ட அடுத்த நொடியிலேயே நிறைவேற்றுவது வியப்பாக இருக்கும், அங்கு நான் இத்தனை ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன் நீ இன்றைக்கு பதவிக்கு வந்தவன் என்ற பேச்சே இருக்காது, காரணம் அனைவரது உள்ளத்திலும் தேசப்பற்று ஒன்றே நிற்குமே தவிர, மனிதர்கள் கண்ணனுக்கு தெரியமாட்டார்கள், சீருடை அணிந்துவிட்டால் ரேஸ் குதிரை போல் தயாராகும் ஒரு பயிற்சி, சாதாரணமாக நடந்தோ அல்லது போடுவதோ கிடையாது தன் எடையில் பாதி எடையை முதுகில் சுமந்து ஓடவேண்டும், தனக்கான தேவைகளை தானே செய்து கொள்ளவேண்டும், யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் முதுகில் சுமந்து செல்லும் பாரம் முதல், அணிந்து கொள்ளும் சீருடை எல்லாவற்றையும் தானே துவைத்துக்கொண்டு , நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பணியாற்றும் நிலை , ஏதோ சண்டை, ஏதோ கைகலப்பு என்று நினைப்பதை விட நம் தந்தை, நம் சகோதரர், நம் உறவினர் அந்த நிலையில் இருக்கிறார் என்ற பாசத்துடன் நாம் இருக்க்கவேண்டும். வந்தே மாதரம்

  • Citizen_India - Woodlands,இந்தியா

   excellent comment Loin Dr Sekar. 100% true what you said. Majority civilians not understand this, I also civilian but my family member was in ARMY and fighter for INDIA in Kargil war and struck in PAK side for 12days when his jeep blasted and IND side d he dead. But my family member came back live after 12days which is miracle for our family, how we fell no words to say. see one bloody idiot dislike your comment so 90% civilian don't feel it, to correct this India must implement compulsory army service 2 years ay age of 17 same as Singapore and Israel it will give patriotism, discipline, commitment, accountability, responsible behaviours and leader ship and lot more benefit to person and nation, the proof is Singapore. In 1965 when Singapore got independent from Malaysia it was one of the poorest and 3rd world slum nation, with 15years in early 80s itself it is one of richest and beautiful 1st world nation.

 • வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா

  போர்ப் பதற்றத்துக்கு சீனாவே காரணம் ஆகவே முதலில் விட்டு கொடுக்க வேண்டியது சீனாதான். இந்தியா பின்வாங்கக் கூடாது

Advertisement