Advertisement

டில்லியில் புதிதாக 412 பேருக்கு கொரோனா

Share
புதுடில்லி: டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 412 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது.

டில்லியில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் கொரோனா பாதித்தவர்களில் 6,954 பேர் குணமடைந்துள்ளனர். 7,233 பேர் சிகிச்சையில் உள்ளனர். மே 26ல் மட்டும் 183 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 500ஐ கடந்து காணப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 412 ஆக குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement