Advertisement

சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்

Share
சென்னை: சென்னை, சேலம் இடையே நாளை (மே.,27) முதல் விமானப் போக்குவரத்து துவங்க உள்ளது.

ஊரடங்கின் காரணமாக சுமார் 2 மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமானப்போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை சேலம் இடையே இயக்கப்படும் ட்ருஜெட் விமானசேவை நாளை முதல் இயக்கப்படட உள்ளது. விமானம் புறப்படும், வந்து சேரும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னையிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.25க்கு சேலம் சென்றடையும். சேலத்திலிருந்து காலை 8.50க்கு புறப்படும் விமானம் காலை 9.50க்கு சென்னை சென்றடையும்.

முதலில் சென்னையிலிருந்து காலை 9.50க்கு புறப்பட்டு 10.30க்கு சென்றடைந்தது. சேலத்திலிருந்து 11.25 க்கு புறப்பட்டு 11.25க்கு சென்னை சென்றடைந்தது. பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க விமானம் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Siva - Tamilnadu,இந்தியா

    Try to understand.

  • Siva - Tamilnadu,இந்தியா

    Explain difference between domestic and international service. IIs COVID19 travel from international flight service??.

Advertisement