Advertisement

இனி வானமே எல்லை; கொரோனா பயம் இல்லை! விமான நிலையத்தில் நான்கு விமானங்கள் டேக் ஆப்

Share
கோவை:கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட, கோவையில் இருந்து, சென்னை, பெங்களூரு, டில்லி நகரங்களுக்கு, பயணிகள் விமான போக்குவரத்து நேற்று துவங்கியது.கொரோனா பீதியில் இருந்து, கோவை மக்கள் மெல்ல மீண்டு வருகின்றனர். இதையடுத்து, கோவைக்கு டில்லி, சென்னை, மும்பை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து, ஆறு விமானங்கள் இயக்க முடிவானது.
நேற்று காலை 9:15 மணிக்கு, டில்லியிலிருந்து முதல் இண்டிகோ விமானம், கோவை வந்தது. 71 பயணிகள் இதில் வந்தனர். இதே விமானம், மீண்டும் டில்லிக்கு, 10:20 மணிக்கு புறப்பட்டது; 30 பயணிகள் பயணித்தனர்.சென்னையிலிருந்து கோவைக்கும், கோவையிலிருந்து சென்னைக்கும் பறந்த, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில், 101 பயணிகள் பயணித்தனர்.
இதுபோன்று, கோவை பெங்களூரு இடையே சென்ற, இண்டிகோ விமானத்தில், 166 பயணிகள் பயணம் செய்தனர். மும்பை, ஐதராபாத் நகரங்களிலிருந்து, கோவை வர திட்டமிட்டிருந்த இரு விமானங்கள், ரத்து செய்யப்பட்டன.இத்தகவலை, கோவை விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் தெரிவித்தார்.விமான நிலையத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பரிசோதனைக்குப் பிறகே, நகருக்குள் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement