Advertisement

ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவை?

Share
ஊரடங்கிற்கு பின், மீண்டும் ஜூன் மாதம் முதல், மெட்ரோ ரயில் சேவை துவங்க, நிர்வாகம் தயாராக உள்ளது.


சென்னையில், மெட்ரோ ரயில் சேவை, ஊரடங்கு உத்தரவால், மார்ச், 21ல் இருந்து ரத்து செய்யப்பட்டது.மீண்டும், ஜூன் மாதம் முதல், மெட்ரோ ரயில் சேவை துவங்க, நிர்வாகம் தயாராக உள்ளது. நிலையங்களில், பயணியர் சமூக இடைவெளியைப் பின்பற்ற ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.நிலையத்தில் உள்ள, நான்கு நுழைவு வாயிலில், ஒரு நுழைவு வாயிலை மட்டும் பயன்படுத்தவும், 'தெர்மல் ஸ்கேன்' சோதனைக்கு பின், பயணியர் ரயிலில் அனுமதிக்கவும் ஏற்பாடு உள்ளது. ஜூன், 1ல் இருந்து, ரயில் இயக்க நிர்வாகம் தயாராக உள்ளது.

இது குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:சென்னையில், கொரோனா வைரஸ் அதிகரித்தாலும், வரும், ஜூன், 1ம் தேதியில் இருந்து, ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படவோ அல்லது தளர்த்தப்படவோ வாய்ப்புள்ளது என, பொதுமக்கள், பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பிற மாநிலத்தில் இருந்து, சென்னைக்கு ராஜ்தானி, 'ஏசி' சூப்பர் பாஸ்ட் ரயில்கள், விமானங்கள் இயக்க அரசு அனுமதித்துள்ளதால், 'ஏசி'பெட்டிகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்க, அரசின் அனுமதி கிடைக்கும் என, எதிர்பார்த்துள்ளோம்.அனுமதி கிடைத்தால், ஜூன் மாதத்தில் இருந்து. போதிய பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன், ரயில்களை இயக்க தயார் நிலையில் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • mupaco - Madurai,இந்தியா

    மதுரை நாமக்கல் காட்பாடி விழுப்புரம் திருச்சி மதுரை என வட்டப்பாதையில் ரயில் இயக்கலாம்.

Advertisement