Advertisement

கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு: சுகாதார துறை அதிர்ச்சி

Share
சென்னை : கொரோனா பாதிப்புக்கு இடையே, 'டெங்கு' காய்ச்சல் பரவுவதால், சுகாதாரத் துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

அடையாறு மண்டலம், 180வது வார்டு, தரமணியைச் சேர்ந்த, 6 வயது சிறுமிக்கு, சில நாட்களாக காய்ச்சல் இருந்து உள்ளது.பரிசோதனையில், கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. அடுத்தகட்ட பரிசோதனையில், 'டெங்கு' காய்ச்சலால் சிறுமி பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.தற்போது சிறுமி, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், முகலிவாக்கம், மணப்பாக்கம் உட்பட, சென்னையில் பரவலாக, ஒரு சிலர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். பொதுவாக, ஜூலை முதல் டிசம்பர் வரை, டெங்கு காய்ச்சல் பரவலாக இருக்கும்.

கொரோனாவுக்கு இடையில், டெங்கு பரவுவது, சுகாதாரத் துறை அதிகாரிகள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சுகாதாரத் துறை முழுதும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இருப்பதால், கொசு ஒழிப்பு பணி நடைபெறுவதில்லை. இதனால் கூட, டெங்கு பாதிக்க வாய்ப்பிருக்கலாம் என, கூறப்படுகிறது.டெங்கு காய்ச்சல் தொடர்பாக, மாநகராட்சி சுகாதாரத் துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ஆப்பு -

    கொசு மூலம் கொரோனா பரவலாம். எனவே அதுக்கு கொசுரோனான்னு பேர் வெச்சு அசத்துங்க.

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    ஹா.. ஹா.. டெங்குவை மருமக்காய்ச்சல்ன்னு பட்டியல் போட்டோம்.. இப்போ கொரோனாவை டெங்குன்னு சொல்ல வேண்டியதாயிருக்கு.. கொரோனா சாவு 3.5% க்குள்ளே இருக்கணும்

Advertisement