Advertisement

4வது திட்டத்தில் குடிநீர் குழாய் பதிப்பு பணி பாதிப்பு

Share
திருப்பூர்:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நான்காம் குடிநீர் திட்டத்துக்கு குழாய் பதிக்கும் பணி தொழிலாளர்கள் இல்லாமல் இன்னும் துவங்கவில்லை.திருப்பூர் மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நான்காம் குடிநீர் திட்டம் செயல்படுத்த பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் - பவானி ஆற்றிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம், திருப்பூர் கொண்டு வரும் திட்ட பணி துவங்கப்பட்டது.மேட்டுப்பாளையம் - அன்னுார் - அவிநாசி -வஞ்சிபாளையம் வழியாக இதற்காக ராட்சத குழாய் அமைக்கும் பணி நடந்தது. இதில், வஞ்சிபாளையம் கணியாம்பூண்டி பிரிவு வழியாக ரோட்டோரம் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.
இதனால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.பணியில் ஈடுபட்டிருந்த தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் இதுவரை வரவில்லை. இதனால், வஞ்சிபாளையம் பகுதியில் குழி தோண்டி குழாய் பதித்த நிலையில் பணி பாதியில் நிற்கிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி வர உரிய அனுமதி கடிதம் பெறப்பட்டுள்ளது. இரண்டொரு நாளில் அவர்கள் திருப்பூர் வருவர். அதன்பின், பணிகள் தொடர்ந்து துரிதமாக மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement