Advertisement

ஆர்.எஸ்.பாரதி கைது விவகாரத்தில் அரசுக்கு தொடர்பில்லை: முதல்வர் இ.பி.எஸ்.,

சென்னை: ஆர்.எஸ்.பாரதி கைது விவகாரத்தில், தமிழக அரசுக்கு தொடர்பில்லை. இதில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே, அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு பா்த்து கொள்ளும்படி கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் நிவாரண பொருட்கள் மக்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் சரியான நடவடிக்கை மூலம் சேலம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் சேலம் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வந்த 719 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.பாரதி, பட்டியலினத்தவரை அவமதித்து பேசியதாக, கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கும், அரசுக்கும் எந்த தொடர்பில்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, ஸ்டாலின் அவதூறு பிரசாரம் செய்கிறார். இது கண்டிக்கத்தக்கது. சட்டரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும், அரசிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன சம்பந்தம். பொய் பிரசாரம் செய்து அனுதாபத்தை தேட ஸ்டாலின் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தவறாக பேசியவுடன் அவரை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்.
அது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு அழகு. அதைவிட்டுவிட்டு அரசை குறை சொல்வது என்ன நியாயம். இதனை மக்கள் சிந்திக்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் தான் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக நாடகமாடுகிறார்கள். உயர் பதவியில் உள்ளவர்களை விமர்சிப்பதால் கட்சி இருப்பதை காட்டி கொள்ள முடியும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் டாக்டர்கள்,நர்சுகள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். அது ஸ்டாலின் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையால், சமூக பரவல் ஏற்படவில்லை. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட நர்சுகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டுமே நோய் பரவல் உள்ளது.

தமிழக அரசு கேட்ட அளவிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை. படிப்படியாக அளித்து வருகிறது. ஊரடங்கை தடுப்பது குறித்து நிபுணருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என நிதித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை சமாளிக்க பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் வளர்ச்சி பணிகள் குறையாமல் பார்த்து கொள்ளப்படும். ஜிஎஸ்டி நிதியை படிப்படியாக அரசு வழங்கிவருகிறது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க அதிமுக அரசு தொடர்ந்து துணை நிற்கும் இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  ஓப்பீஸ் தான் காரணம்ன்னு சொல்கிறார்.

 • Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா

  ஹை

 • Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா

  ஒரு நீதிபதியாக நீதிமன்ற வாசலில் ஒருத்தன் கடுமையா பேசுகிறான் அவனை என்ன செய்தீர்கள்

 • Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா

  நாவிற்கு கடிவாளம் இல்லாமல் பேசியவர் மீது நடவடிக்கை தேவை என்றுதான் தமிழக மக்களே எண்ணியிருப்பார்கள். இந்த லட்சணத்தில் அரசுக்கும், போலீஸ் நடவடிக்கைக்கும் தொடர்பில்லை என்று கூறி மக்களது அபிமானத்தை இழக்கிறீர்கள் முதல்வரே ......... அம்மாவின் அரசு அல்ல இது ....... அவருடைய துணிவு எங்கே .........

  • Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா

   குன்ஹா என்று தீர்ப்பு கொடுத்தாரோ அன்றே அந்த வீரம் எல்லாம் காணாம போச்சு

 • மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா

  கொரோனா தடுப்பு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு எனக் கூறியதால் என்னை கைது செய்கிறார்கள். கோவையில் கொரோனா தடுப்பு பொருள்கள் வாங்கியதில் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. ஓ.பி.எஸ் செய்த ஊழலைப் பற்றி நான் புகார் அளித்தேன். சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது

Advertisement