Advertisement

ரஷ்யாவை முந்தியது பிரேசில்: கொரோனா பாதிப்பில் இரண்டாமிடம்

பிரேசிலியா: கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடத்திலிருந்த ரஷ்யாவை தற்போது பிரேசில் முந்தியுள்ளது.

21 கோடி மக்கள் தொகை கொண்ட தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதுவரை 3 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 21,116 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்புகளை கொண்ட 6-வது நாடாக பிரேசில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1,001 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மூன்றாவது முறையாக ஒரே நாளில் ஆயிரம் பேரை இழந்துள்ளது.
‛பல தென் அமெரிக்க நாடுகளில் இது தொடர்பான கவலைகளை காணமுடிகிறது. அதிலும் பிரேசில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,' என நேற்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நிலையில், தொற்று பாதிப்பில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது பிரேசில். தீவிர வலதுசாரி அதிபரான ஜெய்ர் போல்சனாரோ, ஆரம்பத்தில் கொரோனா வைரஸை சிறிய காய்ச்சலுடன் ஒப்பிட்டார். கடுமையான சமூக விலகல் விதிமுறைகளை வகுத்த சுகாதார அமைச்சரை வீட்டுக்கு அனுப்பினார். அடுத்து பொறுப்பேற்ற சுகாதார அமைச்சரும் ஒரு மாதத்திற்குள் பதவி விலகினார். தேவையில்லாமல் பொருளாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்துக்கிறார்கள் என ஊரடங்கை அறிவித்த மாநில கவர்னர்களையும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Sharvintej - madurai,இந்தியா

    தீவிர வலதுசாரி அதிபரான ஜெய்ர் போல்சனாரோ, ஆரம்பத்தில் கொரோனா வைரஸை சிறிய காய்ச்சலுடன் ஒப்பிட்டார். கடுமையான சமூக விலகல் விதிமுறைகளை வகுத்த சுகாதார அமைச்சரை வீட்டுக்கு அனுப்பினார். அடுத்து பொறுப்பேற்ற சுகாதார அமைச்சரும் ஒரு மாதத்திற்குள் பதவி விலகினார். தேவையில்லாமல் பொருளாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்துக்கிறார்கள் என ஊரடங்கை அறிவித்த மாநில கவர்னர்களையும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "கம்யூனிஸ்டுக்கு சொம்படிக்கிற கூட்டம் எங்கே காணோம்??"{

  • sundarsvpr - chennai,இந்தியா

    புராணங்களில் பூமியில் உள்ளவர்கள் தேவ லோகம் திருப்பாற்கடல் கைலாயம் பிரம லோகம் செல்வார்கள் திரும்புவார்கள் என்பதை கண்டோம். பூமியில் கொரோனா இல்லாத இடம் இல்லை. வேறு லோகத்திற்கு செல்ல வாய்ப்பு தற்போது இல்லை. கொரோனா எதிர்ப்பை சமாளிக்க வழிமுறை காணவேண்டும்.

  • Paramasivam - Chennai,இந்தியா

    இப்போவாவது இந்திய அரசின் லாக்டவுன் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    பொறுப்பற்ற ஆட்சியால் வந்த பரிதாபம்..பாவம் மக்கள்

Advertisement