Advertisement

அரசு பேருந்தை திருடி ஊர் திரும்ப முயன்ற வாலிபர் கைது

பெங்களூரு: ஊரடங்கிற்கு முன் பெங்களூருவில் இருந்து ஆந்திரா வந்தவர் ஊர் திரும்ப முடியாததால் அரசு பேருந்தை திருடிச் சென்று பிடிப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுராவை சேர்ந்தவர் முசாமில் கான் என்ற இளைஞர். ஊரடங்குக்கு முன்பு ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருக்கிறார். நீண்ட நாட்களாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த அவர், நேற்று நடந்தே ஊருக்கு திரும்பி செல்லலாம் என முடிவு செய்து, அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்துள்ளார். அங்குள்ள பணிமலையில் பேருந்து ஒன்று சாவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்ட அவர், சட்டென யோசித்து பேருந்தை திருடிக் கொண்டு பெங்களூரு செல்ல முடிவெடுத்தார்.
பேருந்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்வதை பார்த்த பணிமனை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அனந்தபுரத்தில் உள்ள தனியார் கார் தொழிற்சாலை அருகே வந்த பேருந்தை தடுத்து நிறுத்தி, பேருந்தை கடத்தி வந்த முசாமில் கானை கைது செய்தனர். சொந்த ஊர் செல்ல நினைத்தவர் தற்போது சிறை சென்றுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    பஸ்சை ஓட்டறது அவ்வளவு ஈஸியா? ஹிஹிஹி

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    இப்போ மூனு வேளை சோறும் கியாரண்டி..

  • Balasubramanian - Bangalore,இந்தியா

    அரசு பேருந்தை திருடினால், எவரும் நடுவில் நிறுத்தி விசாரிக்க மாட்டார்கள் என்று, எவ்வளவு லாஜிக்கலாக யோசித்து இருக்கிறார் பாருங்கள் என்ன, நடுவில் சிலரை ஏற்றி சென்றிருந்தால் விருதே கிடைத்தது இருக்கும் இப்பொழுது அவ்வளவு முயற்சியும் வீண்

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

    ரம்ஜான் பிரியாணியை பெங்களூரில் திங்க ஆசை பட்டு இருப்பாரு இந்த மூர்க்கர் முஸம்மில் கான்.. ஆந்திராவில் வண்டி கிடைக்கவில்லை என்பதற்காக அரசு பேருந்தை ஆட்டைய போட நினைச்சவர் வசமா ஆந்திர போலீஸ் கிட்ட சிக்கிக்கிட்டாரு ..இவரை ஆவக்கா ஊருகாய் போட்டு விடுவார்கள்.. ஹா ஹா ஹா

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

    வடை பாயாசத்துடன் ஜெயிலில் நல்ல நுங்கை எடுங்க இந்த அறிவற்ற மூர்க்கன் முஸாமில் கான்.. என்ன தெனாவட்டு அரசு பேருந்தையே தன்னோட சொந்த ஆதாயதுக்கு இஷ்டத்துக்கு பயன்படுத்தி இருக்காரு..இவெங்களுக்கு தான் அரசியலவியாதிகள் முட்டு கொடுப்பார்கள்..வோட்டு வேணுமே...

Advertisement