Advertisement

உணவக உரிமையாளர்கள் நிதியமைச்சர் நிர்மலாவுடன் பேச்சு

புதுடில்லி : ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள உணவக துறைக்கு ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம், தேசிய உணவகங்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, இச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவால், உணவகங்கள் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமனுடன், சங்க பிரதிநிதிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினர். அப்போது, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள உணவக துறைக்கு, உடனடியாக சிறப்பு சலுகைகள், குறைந்த வட்டியில் கடன் வசதி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
சலுகைகள் கிடைக்காமல் போனால், மேலும் ஏராளமானோர் வேலையிழக்க நேரிடும் என, தெரிவிக்கப்பட்டது. குறைந்த ஊதியம் வாங்கும் உணவக தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் காப்பீட்டு நிதியம் மூலம், ஊதியம் வழங்கலாம் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அத்துடன், உணவக துறைக்கு, ஜி.எஸ்.டி.,யில் உள்ளீட்டு வரிச் சலுகை வழங்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டது.

அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார். கொரோனாவால் உணவகத் துறை சந்தித்துள்ள முக்கிய பிரச்னைகளுக்கு தற்போது தீர்வு காண்பதாகவும், பின், இத்துறைக்கு நீண்ட கால கொள்கை திட்டத்தை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கலாம் எனவும், நிதியமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • Rajas - chennai,இந்தியா

  ஒன்றை கவனித்தீர்களா. கொள்ளை விலை வைத்து அதிகம் சம்பாதித்த அடையார் ஆனந்த பவன், வசந்த பவன், சங்கீதா, ஹாட்சிப்ஸ் , சரவண பவன் போன்ற ஓட்டல்காரர்கள் இந்த ஊரடங்கில் ஒரு வேலை உணவை கூட ஏழை மக்களுக்கு கொடுக்கவில்லை . சமூகத்தின் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் கூட தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு ஏழை மக்களுக்கு உணவு அளித்தார்கள். குழந்தைகள் கூட தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்தார்கள். இவர்களை புறக்கணிப்போம்.

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  இந்த பெரிய ஹோட்டல்களுக்கு எந்த சலுகையும் தேவையில்லை ..ஜிஎஸ்டி செலுத்துவது கிடையாது மாறாக பில்லில் ஜிஎஸ்டி வசூலித்து இவர்களே தின்று விடுகிறார்கள் ..சாதாரண சிறிய உணவு விடுதிகளில் இட்லி ஆறு ரூபாய்க்கு விற்க இயலும்போது இவர்களுக்கு மட்டும் அது ஏன் ஐம்பது ரூபாய் [ஜிஎஸ்டி கொள்ளை ஏசி சார்ஜ் கொள்ளை தனி ] இந்த ஹோட்டல்களை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும் ...ஏசி கேட்டது வாடிக்கையாளரா ? இவர்களுக்கு என்டிஆர்தான் சரி குறைந்த பட்சம் ஒவ்வொரு கடையும் ஐநூறு இட்லி அம்பது பைசாவுக்கு ஒரு இட்லி விற்கவேண்டும் என்று ஆர்டர் போட்டதுடன் அதனை செயல்படுத்தாத ஓட்டல்களுக்கு பூட்டு போட்டார் பாருங்கள் அந்த மாதிரி ஒரு ஆள் இருந்தால்தான் இந்த் மாதிரி பந்தா பார்ட்டிகள் வழிக்கு வரும் .....பெரிய ஓட்டல்களை புறக்கணித்து சிறு சிறு உணவகங்களை ஆதரிக்கவேண்டும்

 • Duruvan - Rishikesh,இந்தியா

  The annul turn over of a2b is 700 cr, saravana Bhavan is 300 cr, sangeetha is 150 cr, Vasantha Bhavan is 60 cr. Most of the quick service restaurants will have 20 to 25% EBITA margin. All these hotel businessman made big money but shedding crocodile tears now to fool the government.

 • Duruvan - Rishikesh,இந்தியா

  25 ருபாய்க்கு கர்நாடகத்தில் தரமான மசால் தோசையும் 10 ரூபாய்க்கு காபியும் கிடைக்கிறது. ஆனால் சென்னையில்???? இந்த பவன் உரிமையாளர்கள் எல்லாம் கோடியில் கொழுத்து Astan Martin காரில் boat clubல் பவனி வருகிறார்கள். இடையில் நடிகைகள் சங்கதி வேறு இவர்கள் cash crunch situation என கூறுவது ஊரை ஏமாத்தவும் அரசாங்கத்தை ஆட்டய போடவும், வங்கியை திவால் ஆக்கவும்தான்

 • RajanRajan - kerala,இந்தியா

  ஏர்போர்ட்டுலே 150 ரூபாய் காபி விற்றானுங்க. இப்போ தீஞ்சு போய்ட்டானுங்க . அந்த துட்டு எல்லாம் இப்போ களமிறங்குது.

Advertisement