Advertisement

பாலைவனத்தில் சிக்கிய நடிகர்: 2 மாதங்களுக்குப் பின் நாடு திரும்பினார்

கொச்சி: ஜோர்டான் நாட்டுக்கு படப்பிடிப்புக்குச் சென்று, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் தவித்த, மலையாள நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர், இரண்டு மாதங்களுக்குப் பின், சிறப்பு விமானம் மூலம், நேற்று பத்திரமாக நாடு திரும்பினர்.

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ், 37. தமிழில், மொழி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர், ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடிப்பதற்காக, அரபு நாடான ஜோர்டானுக்கு, மார்ச்சில் சென்றார். இயக்குனர், நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட, 58 பேர் அடங்கிய படக்குழுவினர், ஜோர்டானில் உள்ள, வடி ரம் பாலைவனத்தில் விறு விறுப்பாக படப்பிடிப்பை நடத்தினர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, மார்ச், 16 லிருந்து, ஜோர்டானில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில், பாலைவனத்தில் சிக்கி தவிப்பதாக, பிரித்விராஜ் சமூக வலைதளத்தில் உருக்கமாக கருத்து பதிவிட்டிருந்தார். கேரளாவில் உள்ள அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், ஆடு ஜீவிதம் படக்குழுவினரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான சிறப்பு விமானத்தில், பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர், 58 பேர், நேற்று பத்திரமாக கொச்சி வந்து சேர்ந்தனர்.

விமான நிலையத்துக்கு வந்த பிரித்விராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. கேரளாவில், படக்குழுவினர் அனைவரும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக, ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கித் தவித்த தங்களை பத்திரமாக மீட்க உதவிய மத்திய அரசுக்கு, பிரித்விராஜும், படக்குழுவினரும் நன்றி தெரிவித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Tamilnesan - Muscat,ஓமன்

    தமிழகத்தை நாசப்படுத்தியதே இந்த சினிமா செய்திகள் தான்........

  • Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா

    Good and charming actor. Welcome back home. Later on this ordeal itself can be made into a film.

  • hindustani - beijing,சீனா

    தமிழ் சமூகத்திற்கு இது மிகவும் முக்கியமா?…அதுவும் பிரதான பக்கத்தில்..ஒருபோதும் மல்லு தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த உதவியும் செய்யமாட்டார்கள்

  • chakkrapani - Vellore,இந்தியா

    என்ன சோறு தண்ணி கிடைக்கலையா ஆளைப்பார்த்தா அப்படி தெரியலையே . உள்ளூர்ல சோறு தண்ணி இல்லாம சாவறவன் எல்லாம் இவங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்க .

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

    மத்திய அரசுக்கு நண்றியா? கொதிப்பானுங்களே அங்கே

Advertisement