Advertisement

சீனாவை எளிதில் விட மாட்டோம் : டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்

வாஷிங்டன்: ''கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது. இந்த விஷயத்தில், சீனாவை எளிதில் விட்டு விடமாட்டோம்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
'கொரோனா வைரஸ் உலகம் முழுவதற்கும் பரவ சீனா தான் காரணம்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். நேற்று அவர் கூறியதாவது:
கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது.

இந்த விஷயத்தில் எங்கள் அதிருப்தியை ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
மீண்டும் அதை பதிவு செய்ய விரும்புகிறோம்; இதை, அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டோம். சீனாவுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுப்போம்.'அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்திருந்தால், வைரஸ் பாதிப்பை குறைந்திருக்கலாம்' என, சிலர் கூறியுள்ளனர்.
இவர்களை விஞ்ஞானிகளாக பார்க்க முடியாது. டிரம்பின் அரசியல் எதிரிகளாகவே பார்க்கிறேன்.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட, 30 நாடுகளுக்கு இடையே, வான் சேவை ஒப்பந்தம், 2002ல் கையெழுத்தானது.
இதன்படி, இந்த, 30 நாடுகளும், தங்களுக்கு இடையே பரஸ்பரம் நம்பிக்கையை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக, தங்கள் பகுதிகளுக்குள் ஆயுதங்கள் ஏந்தாத கண்காணிப்பு விமானங்களை இயக்கலாம்.
ஆனால், ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறி வருகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது என, நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.


இதற்கிடையே, மிச்சிகன் மாகாணத்தில் கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நிவாரண பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், மிச்சிகனில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா

  ஹா ஹா அரசியலுக்காக புரியாமல் பேசும் தார்குறி இவர், முதலாளிகளுக்கு புத்தி செயல்படாது என்பது சில நேரம் இவரை மூலம் தெரியவருகிறது. அமெரிக்காவின் 30 சதவீத பொருளாதாரத்தை குடி கொண்டு இருக்கின்றது அதில் 1% தில் சிறிய ஆட்டம் கொடுத்தாலே அமெரிக்கா அரசாங்கம் ஒருவாரம் சம்பள கொடுக்க முடியாத அளவுக்கு லாக் டோவ்ன் ஆகிவிடும், உணவு பண்டத்தை அமெரிக்காவில் விற்று விட்டு ஆயுதம் வாங்கிக்கொள்ளவேண்டும் என்பதே அமெரிக்காவின் கட்டுப்பாடு ஆனால் சீனா ஆயுத்தத்தில் தன்னிறைவு அடைந்த நாடு இதை வேறு வழிகளில் மீட்டுகின்றது சீனா அதனால் தான் அமெரிக்காவிற்கு சீனா மீது இவ்வளவு காட்டம் சில நேரம் சீனா ரசிய பக்கம் செய்வதும் அமெரிக்காவிற்கு பாதகமாக இருக்குகின்றது

 • ponssasi - chennai,இந்தியா

  டிரம்ப் மிக சிறந்த வர்த்தகர், ஒரு பொருளை எப்படி விற்பது, எந்த காலத்தில் எந்த பொருளை விற்கலாம் என்பதை கணித்து செயல்படுபவர், சீனா அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்க ஒப்பந்தம் போட்டால் எல்லாம் முடிந்துவிடும், அதுவரை டிரம்ப் கர்ஜிப்பார். டிரம்ப் கர்ஜிப்பய் உண்மையென நம்பி சென்றால் தென்கொரியா போல ஆகிவிடும்.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  First these communists should be sent to China let them live talk what they like id chjn3a allows them. Why these peolle barking here? They spoiled all manufacturing induatriea in the name of Union. They have not done anything to laborers.

 • Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா

  சீனாவின் பொருளாதார இழப்பு இந்தியாவுக்கு நன்மை - இதை கூட உணராமல் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் கதறுகிறார்கள். நம் நாட்டை விட சீனா முக்கியமா - அமெரிக்கா எதிர்ப்பு எல்லாம் சும்மா?

 • blocked user - blocked,மயோட்

  சீனாவை சும்மா விட்டுவிடக்கூடாது..

Advertisement