Advertisement

150 ஆண்டு பாரம்பரிய ரயிலடுக்கு பாத்திரம் : பொக்கிஷமாக பாதுகாக்கும் சிவகங்கை மூதாட்டி

சிவகங்கை : சிவகங்கையில் 150 ஆண்டு பாரம்பரிய ரயிலடுக்கு' பித்தளை பாத்திரத்தை காலம் காலமாக பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.

சிவகங்கை பெருமாள் கோயில் தெரு எஸ்.மதுரவள்ளி 65. இவரது வீட்டில் பாரம்பரியமாக இப்பாத்திரத்தை பராமரித்து வருகின்றனர். 150 ஆண்டுக்கு முன் காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் சென்று வர ஆறு மாதமாகும்.

இதற்காக சத்திரங்களில் தங்கும் போது, இந்த ஒரு பாத்திரத்தை எடுத்து சென்று மொத்த குடும்பத்திற்கே சமைத்து தந்துள்ளனர்.14 வகை பாத்திரங்கள்இதில், 10 பேருக்கு தேவையான 3 படி அரிசியில் சாதம் சமைக்கும் பெரிய பாத்திரம். பொறியல் செய்ய 3 அடுக்கு பாத்திரம், சாதம் வடிக்கும் தட்டு (சிப்பல்), குழம்பு சட்டி, காபி டபரா செட், இலுப்பை சட்டி, குடிநீர் செம்பு, அரிசி அளவிடும் படி, பித்தளை டம்ளர் உட்பட ஒரே பாத்திரத்திற்குள் 14 வகை சிறிய பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளது தான் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எஸ்.மதுரவள்ளி கூறியதாவது, எங்கள் முன்னோர் பயன்படுத்திய 150 ஆண்டுக்கும் மேலான இப்பாத்திரத்தை இன்றைய தலைமுறையினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (14)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    உலகின் ஒப்புயர்வற்ற ஒரே இனம் தமிழ் இனம் மட்டுமே . இன்று வளர்ந்த நாடுகளின் மக்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்து கொண்டிருந்தபோது .புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்வதற்கு இம்மாதிரி பாத்திரங்களை தயார் செய்த விஞ்ஞானி தமிழினம்

  • சிவகங்கை சீமை - சிவகங்கை,இந்தியா

    வாழ்த்துக்கள்... மண்ணின் பெருமை..

  • Rajesh - Chennai,இந்தியா

    இப்போ என்னடான்னா, டாஸ்மாக் முன்னாடி, துணி அவிழ்ந்து, மானம் இழந்து மூன்று கிலோமீட்டர் நின்று மது வாங்க அடி தடி......

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    நம் முன்னோர்களின் மூளை உண்மையிலேயே VERY SHARP.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    வாட்ஸ் ஷபில் ஒரு வீடியோவாக இது வலம் வந்தது. ஸ்

Advertisement