Advertisement

ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகள் சீனாவை சாடிய வெள்ளை மாளிகை

வாஷிங்டன் : 'இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை ஆத்திரமூட்டும் வகையிலான ராணுவ நடவடிக்கைகளில், சீன அரசு ஈடுபட்டு வருகிறது' என, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை குற்றஞ்சாட்டி உள்ளது.


அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான செயலர், அலைஸ் வெல்ஸ் இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவை சாடியும், நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், 'சீனா மீதான, அமெரிக்காவின் அணுகுமுறை' என்ற தலைப்பின் கீழ், வெள்ளை மாளிகை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கிழக்கு மற்றும் தெற்கு சீனாவில் உள்ள மஞ்சள் கடல் பகுதியில், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை ஆத்திரமூட்டும் வகையில், சீனா, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.


அந்நாட்டில் ஆட்சியில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் நலன்களுக்கு வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மிரட்டல் மற்றும் வற்புறுத்தல் வழிகளை கையாளுகிறது. இது, சீனாவுக்கே ஆபத்தாக முடியும். நியாயமற்ற நடைமுறைகள் மூலம், உலக தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையில், சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பது, அதன் தேசிய சைபர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி, மேக் தார்ன்பெர்ரி கூறியதாவது:நம் தேசத்தின் சக்திக்கு ஆதாரமாக இருக்கும் அனைத்து கூறுகளிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே, சீனாவை எதிர்த்து, நம்மால் திறம்பட போட்டியிடமுடியும். அப்போது தான் இந்தோ பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகின் இதர பகுதிகளில், சீனாவின் மோசமான செயல்பாட்டை நம்மால் தடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement