Advertisement

ஜெ.,வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிப்பு

சென்னை, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 'வேதா நிலையம்' இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.


ஜெயலலிதா மறைவுக்கு பின், போயஸ் கார்டனில், அவர் வசித்த வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என, அ.தி.மு.க., வினர் வலியுறுத்தினர்.அதையேற்ற, முதல்வர் இ.பி.எஸ்., 'ஜெ., சாதனைகளை நினைவுபடுத்தும் வகையில், அவர் வசித்த வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்' என, 2017 ஆக., 17ல் அறிவித்தார். அதன்படி, நினைவு இல்லத்தை கையகப்படுத்த, தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித்துறை, 2017 அக்., 5ல், நிர்வாக ஒப்புதல் வழங்கியது.

கட்டுப்பாடு



அந்த நிலம் மற்றும் இல்லத்தை கையகப்படுத்த, அதிகாரப்பூர்வ முதல்கட்ட அறிவிப்பு, 2019 ஜூன், 28ல் வெளியானது. இதற்கான உறுதி ஆவணம், இம்மாதம், 6ம் தேதி வெளியிடப்பட்டது. ஜெ., இல்லத்தில் உள்ள, அசையும் சொத்துக்களான, மரச்சாமான்கள், புத்தகங்கள், நகைகள் போன்றவை, மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன.
எனவே, கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடையும் வரை, அங்குள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை, அவற்றின் பராமரிப்புக்காக, அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அந்த இல்லம் மற்றும் அசையும் சொத்துக்களை, தற்காலிகமாக அரசுடைமையாக்கவும், வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' அமைக்கவும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அவசர சட்டம் பிறப்பித்துள்ளார்.

நடவடிக்கை



அறக்கட்டளை தலைவராக முதல்வர், உறுப்பினர்களாக துணை முதல்வர், செய்தித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இருப்பர். செய்தித் துறை இயக்குனர், உறுப்பினர் செயலராக இருப்பார். இந்த அறக்கட்டளை, வேதா நிலையம் இல்லத்தை பராமரிக்கவும், அங்குள்ள அனைத்து அசையும் சொத்துக்களை பாதுகாக்கவும், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (12)

  • Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா

    அங்கு குன்ஹா தீர்ப்பும் வைக்கணும் அப்போ தான் பயம் வரும் இனி சுருட்ட கூடாது என்று

  • Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா

    எல்லாம் சசிகலா பயம் சாரி மயம்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    நம்பர் 1

  • Visu Iyer - chennai,இந்தியா

    பார்வையாளருக்கு அனுமதி டிக்கெட் ரூ.500 என போடுங்க.. அதுங்க gst உண்டு என சொல்லுங்க.. அரசுக்கு வருவாய் வரும்..

  • Visu Iyer - chennai,இந்தியா

    அவர் குற்ற்றவாளி என்று தானே சசிகலா சிறையில் இருக்கிறார்.. அப்படி என்றால்.. அவருக்கு நினைவு இல்லமா என்று கேட்க மனம் வருகிறதா.. சரி... அம்மா மரணத்தை விசாரித்த விசாரணை கமிஷன் என்ன ஆச்சு.. மத்திய அரசின் பாதுகாப்பில் இருந்த முன்னாள் முதல்வர் மரணம் குறித்த உள்துறை அமைச்சகம் எதுவும் சொல்லி உள்ளதா...?

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      அதுக்கு தர்ம யுத்தத்தை விசாரிக்கனும்..செலவுக்கு வந்த கேடு.

Advertisement