Advertisement

இந்திய துாதருக்கு ஐ.நா., வரவேற்பு

நியூயார்க் : ஐ.நா., சபையில், இந்தியாவின் புதிய துாதராக நியமிக்கப்பட்டிருக்கும், டி.எஸ்.திருமூர்த்திக்கு, அந்த சபை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபைக்கான, நம் நாட்டின் புதிய நிரந்தர துாதராக, டி.எஸ்.திருமூர்த்தி, மே, 9ல் பொறுப்பேற்றார்.இது குறித்து, ஐ.நா., சபை செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:புதிதாக பொறுப்பேற்றுஉள்ள, இந்தியாவின் நிரந்தர துாதர், டி.எஸ்.திருமூர்த்தியை, மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். எதிர்காலத்தில், அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு, ஐ.நா., சபை தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் விரும்புகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.''ஐ.நா.,வின், இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என, திருமூர்த்தி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement