Advertisement

கவலைப்படாதே தம்பி.. இளைஞருக்கு உதவிய முதல்வர்

சென்னை: வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவும்படி வேண்டுகோள் விடுத்த இளைஞருக்கு முதல்வர் பழனிசாமி உதவி செய்துள்ளார். முதல்வரின் இந்த உடனடி நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து டுவிட்டரில் இளைஞர் ஒருவர் பதிவிட்டதாவது: என் அப்பா கேரளா சென்று வந்தார். எனக்கு வைரஸ் அறிகுறி உள்ளது. நெஞ்சு வலியால் கஷ்டப்படுகிறேன். டாக்டரிடம் சென்றால் திட்டி அனுப்புகிறார்கள், வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவுங்கள் ஐயா. இல்லையெனில் தற்கொலை தான் முடிவு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அவருக்கு டுவிட்டரில் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, 'கவலை வேண்டாம் தம்பி.. அமைச்சர் விஜயபாஸ்ர், பீலா ராஜேஷ் ஐஏஎஸ்., அந்த இளைஞருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என பதிவிட்டார்.

இதனையடுத்து சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், முதல்வருக்கு பதில் டுவிட் செய்துள்ளார். அதில், அவரிடம் பேசிவிட்டதாகவும், அவர் கடலூரில் இருப்பதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் பதிவிட்டார். இளைஞரின் வேண்டுகோளை ஏற்று, துரித நடவடிக்கை எடுத்த முதல்வரையும், சுகாதார செயலாளரையும், பலரும் பாராட்டி வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (20)

  • Tamilnesan - Muscat,ஓமன்

    கட்டு மரம் ஆட்சியில் யாரவது நிதி கொடுக்கிறேன் என்றால் உடனடியாக இது போல செயலில் இறங்குவார்கள். அடுத்த ஆட்சி அதிமுக தான். சந்தேகமில்லை.

  • Covim-20 - Soriyaar land,இந்தியா

    சுடலைக்கும் அநீதி மய்ய கமலகாசனுக்கும் இந்த மாதிரி செய்திகளெல்லாம் காதில் விழாது.. கண்ணில் படாது.. இப்போது மட்டும் அவர்களுக்கு கண்ணும் காதும் நொள்ளை ஆகிவிடும்...

    • madhavan rajan - trichy,இந்தியா

      Do not blame stalin like that. He also got news through his scheme Onrinaivom vaa that one person in Dindigul wanted pakoka and within six hours he had arranged for the same through the district secretary. As far as kamal is concerned nobody will ask anything from him because he will start giving big lecture on it and will write letters about that to all the leaders of the world of the his sufferings.

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    நீண்ட நாட்களுக்கு பின் எளிமையான மனிதரை விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக கிடைத்ததற்கு ஆண்டவருக்கு நன்றி

  • NATARAJAN - Coimbatore,இந்தியா

    ஒன்றாக பரப்புவோம் வா என முழக்கமிடும் சுயநல தலைகளின் நடுவில் ஆடம்பரமில்லாத ஒரு ஒரிஜினல் தமிழன் தமிழ் மக்களை ஆழ பிறந்தவன் என மகிழ்ச்சி கொள்கிறோம்

  • Veeramani Shankar - Hyderabad,இந்தியா

    முதல்வருக்கு வாழ்த்துகள்.

Advertisement