Advertisement

ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேர் சிக்கினர்

சென்னை : சென்னையில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், அதிரடி சோதனை நடத்தி, ஆந்திராவுக்கு கடத்த இருந்த, 3,850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

சென்னை, ராயபுரம், லைன் தர்கா சுற்றுச்சுவர் பகுதியைச் சேர்ந்தவர், கஜேந்திரன், 58. இவர், தன் கூட்டாளிகளான, வண்ணாரப்பேட்டை, நல்லப்ப வாத்தியார் தெருவைச் சேர்ந்த, மோகன், 39, எர்ணாவூர் நாகராஜன், 49, ஆகியோருடன் சேர்ந்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில், இரு தினங்களாக, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு, டி.ஜி.பி., பிரதீப் வி பிலிப் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தி, கஜேந்திரன் உள்ளிட்ட மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து, ஆந்திராவுக்கு கடத்த இருந்த, 3,850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 'டாடா ஏஸ்' வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement