Advertisement

கொரோனா கட்டுப்பாடு தெருக்கள் குறைகிறது

சென்னை : சென்னையில், கொரோனா பாதிப்பு கட்டுப்பாடு தெருக்கள் குறைந்து வருகின்றன. நேற்று, 86 தெருக்களை மாநகராட்சி விடுவித்துள்ளது.

சென்னையில், கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்களை, மாநகராட்சி, 'சீல்' வைத்து, கட்டுப்பாடு பகுதிகளாக அறிவித்தது. அதன்படி, 1,000க்கும் மேற்பட்ட தெருக்களை, மாநகராட்சி கட்டுப்பாடு பகுதிகளாக அறிவித்து, சீல் வைத்திருந்தது. கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள், பல்வேறு சிரமத்திற்கு உள்ளாவதை தொடர்ந்து, கட்டுப்பாடு பகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.அதன்படி, ஒரு தெருவில், ஐந்து நபர்களுக்கு குறைவாக பாதிக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட நபர்களை சுற்றியுள்ள, ஐந்து வீடுகள் மட்டுமே, கட்டுப்பாடு பகுதிகளாக மாற்றி அமைக்கப்பட்டது.

ஐந்து நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டால், அந்த தெருக்கள் முழுவதும், சீல் வைக்கப்படுகிறது. அதன்படி, 1,000க்கும் மேற்பட்ட தெருக்கள், கட்டுப்பாடு பகுதிகளாக இருந்த நிலையில், பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் விடுவிக்கப்படுகின்றன. அதன்படி, நேற்று மட்டும், 86 தெருக்களை மாநகராட்சி விடுவித்துள்ளது. இதில், திரு.வி.க. நகர் மண்டலத்தில், 20 தெருக்கள், ராயபுரம் மண்டலத்தில், 18 தெருக்கள் என, மொத்தம், 86 தெருக்களை மாநகராட்சி விடுவித்துள்ளதால், அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். தற்போது, கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள, 635 தெருக்களை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவித்து, சீல் வைக்கப்பட்டு உள்ளன.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement