Advertisement

விதி மீறும் கடைகள்; அபராதம் வசூலிக்க குழு

குன்றத்துார் : குன்றத்துார் பேரூராட்சியில், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு, அபராதம் விதிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட, குன்றத்துார் பேரூராட்சிகளில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், தடுப்பு பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மற்றொரு புறம், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, இப்பேரூராட்சியில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.கடைகள் திறந்திருந்தாலும், சமூக இடைவெளியை யாரும் பின்பற்றுவதில்லை. முக கவசம் அணிவதும் குறைந்துள்ளது. இதனால், வைரஸ் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த பேரூராட்சி நிர்வாகம், சமூக இடைவெளியை பின்பற்றாத மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு, அபராதம் விதித்து வருகிறது. இதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், பேரூராட்சி முழுதும் கண்காணிப்பில் ஈடுபடுவர்.திறந்திருக்கும் கடைகளில், முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு, அபராதம் விதித்து வருகின்றனர். இந்த அபராத நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement