Advertisement

பத்திரிகை துறை கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்துவோம்:முருகன்

சென்னை : ''பத்திரிகை துறையின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, மத்திய அரசிடமும், நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்துவோம்,'' என, தமிழக பா.ஜ., தலைவர், முருகன் கூறினார். கொரோனா ஊரடங்கால், பத்திரிகை நிறுவனங்கள், கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. நெருக்கடியில் இருந்து மீள, எம்.பி.,க்கள் வாயிலாக, அழுத்தம் தரும்படி, அரசியல் கட்சி தலைவர்களை, பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்தித்து, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதன்படி நேற்று, தமிழக பா.ஜ., தலைவர், முருகனை, சென்னை கமலாலயத்தில், 'தினமலர்' இல.ஆதிமூலம், 'தி ஹிந்து' என்.ராம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினர்.

அவர்கள் அளித்த மனுவில், 'தினத்தந்தி' அதிபர், எஸ்.பாலசுப்பிரமணிய ஆதித்தன், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழும தலைவர், மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

'செய்தித் தாள்கள் மீதான சுங்கவரியை குறைக்க வேண்டும். அரசு விளம்பரங்கள் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.
'அரசு விளம்பர கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்தி தர வேண்டும்; அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, முழுமையாக வரிவிலக்கு அளிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.இந்த சந்திப்பின் போது, பா.ஜ., மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகன், மாநில துணைத் தலைவர், எம்.என்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.


இது தொடர்பாக, முருகன் கூறியதாவது:
'பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் என்னை சந்தித்தனர். செய்தித் தாள்களுக்கான சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பத்திரிகைகளுக்கு வைத்து விளம்பர நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.'அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்த வேண்டும்' என்பது உட்பட, பல கோரிக்கைகளை, மத்திய அரசுக்கு வைத்துள்ளதாக தெரிவித்தனர்.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி, பத்திரிகை துறையை பாதுகாக்கும்படி, மத்திய அரசிடமும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • Tamilnesan - Muscat,ஓமன்

  இனி மேலாவது ........

 • மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா

  ஒரு முறை அப்துல் கலாம் அய்யா நன்றாக சொன்னார்க்கள், வளர்ந்த பிற நாடுகளை ஒப்பிடும் போது இந்திய பத்திரிக்கைகளில் தான் எப்போதும் எதிர்மறை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. எல்லா குற்றங்களும் இந்தியாவில் உள்ளதை விட வளர்ந்த நாடுகளில் அதிகம். ஆனால் அவை சட்டத்தால் வன்மையாகவும், பத்திரிக்கைகளால் மிகைப்படுத்தி காட்டப்படாமலும் இருக்கிறது. நான் ஒருமுறை கூட மேல் நாட்டு பத்திரிக்கைகளில் நில அபகரிப்பு, ரயில் மற்றும் பொது இடங்களில் திருட்டு போன்ற செய்திகளை கண்டதில்லை. ஆனால் அவையெல்லாம் அங்கு தினசரி நடந்துகொண்டு தான் உள்ளது. பதிர்க்கைகளுக்கும் தேசப்பற்று மிகவும் அவசியம்.

 • spr - chennai,இந்தியா

  அடுத்துப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் நாங்கள் பெருத்த இசப்பைச் சந்தித்தோம் எங்களுக்கு இழப்பீடு வேண்டுமென்பார்கள் ஜேப்படித் திருடர்கள் கூட கொரோனாவால் கும்பல் இல்லை எனவே எங்கள் தொழில் பாதிக்கப்பட்டது இழப்பீடு வேண்டுமென்றாலும் வியப்பில்லை.

 • vvkiyer - Bangalore,இந்தியா

  நிலுவையில் உள்ள பாக்கிகளை கேட்பது சரி.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  உண்மையை திரித்து வெளியிடும் எந்த பத்திரிகைக்கும் ஆதரவு தரக்கூடாது.

  • OUTSPOKEN - CHENNAI,இந்தியா

   sariyana badhil

  • OUTSPOKEN - CHENNAI,இந்தியா

   Government should give aid support only to the medias based on their quality of news giving without any discrimination. Govt should stop aid to the medias showing discrimination, publishing wrong informations, no moral. eithical values and quallities

Advertisement