Advertisement

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா

மும்பை: மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் மொத்தம் 44,582 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 63 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை மஹாவில் மொத்தம் 1,517 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஆறாவது நாளாக மாநிலத்தில் 2,000 பேருக்கும் அதிகமாக தொற்று ஏற்பட்டது.

மஹாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 12,583 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து உள்ளனர். 30,474 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். அங்கு 3, 32,777 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மும்பை தாராவியில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தாராவியில் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,478 ஆக உயர்ந்துள்ளது. தாராவி பகுதியில் மட்டும் 57 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement