Advertisement

பசி கொடுமையால் இறந்த நாயை சாப்பிட்ட நபர்

புதுடில்லி: டில்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் சடலத்தை, பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இதுகுறித்து ஜெய்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18ம் தேதி, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். டில்லி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, சாஹபுரா பகுதியில், சாலையில், ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். பின் அவர் அருகே சென்ற நருகா, அவருக்கு உணவும் நீரும் வழங்கினார். இந்த வீடியோவை கண்ட பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவும் வைரலானது.
இதனை தொடர்ந்து பேஸ்புக்கில், நருகா பதிவிட்டதாவது: பசியால் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருப்பதை சாலையில் பார்த்தேன். யாரும் அவருக்கு உதவ வாகனங்களை நிறுத்தவில்லை என்பது கவலை அளிக்கிறது. நான் அவருக்கு உணவும், நீரும் வழங்கினேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  எல்லாவற்றிற்கும் அரசையோ அரசு எந்திரங்களையோ அரசு அதிகாரிகளையோ மற்ற உதவிகளையி எதிர்பார்த்து காத்திருக்காமல் சக மனிதருக்கு உன்ன உணவும் உடுக்க உடையும் மக்களாகிய நாம் தரலாமே? நருகா அவர்களின் மனிதாபிமானத்திற்கு வாழ்த்துக்கள்.

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  ஒரு கொரோனாவுக்காக ஒட்டுமொத்த தேசத்தையும் தெருவில் விடவேண்டுமா ? கொரோனா வந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ளட்டும் ..அதற்காக ஊரடங்கு வேலையிழப்பு பட்டினி என்று மக்களை தவிக்கவிடுவது ரொம்ப ஓவர் ....எப்போதும் போல வாடிக்கையாக இந்தியா இயங்கட்டும் ....டிபி அம்மை மற்றும் மற்ற தொற்றுக்களை வென்றது போல இந்தியர்கள் இந்த கொரோனாவையும் வெல்வர் ..ஒரு வைசஸ்க்காக ஒட்டுமொத்த நாட்டையும் கோழைகளாக்குவது தவறு

 • natesa -

  central government totally failed to protect migration workers

 • Narayanan K -

  மிகவும் கொடூரமான மற்றும் வருத்தமளிக்கும் செய்தி. இதற்கு பாஜகவையோ அல்லது கான்கிராசையோ குற்றம் சொல்லி பயனில்லை. நான்கு வேளை நன்றாக தின்று உறங்கும் நமக்கும் பங்கு உள்ளது. நமது உணவிலிருந்து ஒரு பகுதியை இல்லாதவா்களுக்கு கொடுப்போம். அரசியல்வாதிகள் வோட்டு கேட்க வரும்போது செருப்பால் அடிப்போம். அவருக்கு உணவளித்தவருக்கு இறைவன் நல்லருள் வழங்குவார்

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  ...அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று உறுதியான செய்தி வெளியான பிறகு இந்த செய்தி எதற்கு ? இது போன்ற செய்திகளை தவிர்ப்பது நல்லது ....உடனே இங்க வந்து அரசு சரியில்ல ஆட்சி சரியில்லைன்னு வன்மத்தை கக்க ஆரம்பிச்சிட்டாங்க ...

  • Ray - Chennai,இந்தியா

   THE WORLD IS IN GREATER PERIL FROM THOSE WHO TOLERATE OR ENCOURAGE EVIL THAN FROM THOSE WHO ACTUALLY COMMIT IT

Advertisement