Advertisement

ஊரடங்கால் பெருமளவு பலி எண்ணிக்கை தவிர்ப்பு:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளுக்காக, மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவின் தலைவரும், 'நிடி ஆயோக்' அமைப்பின் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு, சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் மூலம், 14 - 29 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல் படுத்தப்படாமல் இருந்தால், நம் நாட்டில், 37 ஆயிரத்திலிருந்து, 78 ஆயிரம் பேர் வரை, வைரஸ் பாதிப்புக்கு பலியாகி இருப்பர். ஊரடங்கு காரணமாக, ஆயிரக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பல்வேறு ஆய்வுகள் மூலம், இந்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பும் அபாரமானது.
ஊரடங்கு காலத்தை வைரஸ் தடுப்பு நடவடிக்கைளுக்கு, சுகாதாரத் துறை முழுமையாக பயன்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே, மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் பாதிப்பு குறைவாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது:கடந்த, 24 மணி நேரத்தில் மட்டும், நாடு முழுதும், 3,234 பேர், வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் விகிதம், மே, 19ம் தேதி, 3.13 சதவீதமாக இருந்தது. தற்போது, 3.02 சதவீதமாக குறைந்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், முழு வீச்சில் வைரஸ் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதுவரை, 27 லட்சத்து, 55 ஆயிரத்து, 714 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த, 24 மணி நேரத்தில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • ஆப்பு -

    மொத்தமாகவே ஆசிய நாடுகளில் பாதிப்பு குறைவாகவே உள்ளது.

  • ஆப்பு -

    மொத்தமாகவே ஆசிய நாடுகளில் பாதிப்பு குறைவாகவே உள்ளது.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    தடுக்கப்படவில்லை, தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது தான் சரியான உண்மை. இந்தியாவில் தொற்றின் வீச்சு இன்னும் செங்குத்தாக உயர்கிறது. சாவு எண்ணிக்கை இந்திய மரபணுவின் தொற்று எதிர் சக்தி காரணமாக 3.3 % தான் உள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு ஒரு நிம்மதி. அவர்களால் நடந்த விஷயம் அல்ல. நாமாக அவர்களுக்கு கொடுக்கும் ஒரு நிம்மதி. ஆட்சியாளர்கள் இதை கெடுக்காமல் இருந்தாலே போதும்.

Advertisement