Advertisement

காங்., கட்சியின் முக்கிய நிர்வாகிக்கு கொரோனா

புதுடில்லி: காங்., கட்சியின் முக்கிய நிர்வாகியான சஞ்சய் ஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா, பல தேசிய செய்தி சேனல்களில், விவாதங்களில் காங்., சார்பில் பங்கேற்பவர். மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வருபவர். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அடுத்த 10 முதல் 12 நாட்கள் நான் வீட்டில் தனிமையில் இருக்க போகிறேன். கொரோனா பரவலை குறைத்து மதிப்பிட வேண்டாம். அது எளிதில் பரவும் தன்மை வாய்ந்தது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் விரைவில் குணம் பெற வேண்டும் என பலரும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா

    This man Sanjay Jha used to participate in most of the debates in English Channels and would oppose blindly Modiji. Quite unreasonable.Stooge no.1 of the Family.

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    கொரோனா அல்ல இத்தாலியானோ என்கின்ற நோய் தாக்கியிருக்கும்

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    பாவம் … வீட்டுக்காரி கூட கிட்ட வரமாட்டா ...

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    அந்த காங்கிரஸ் கட்சிக்கே 'கொரோனா' பிடிச்சிருக்கு. "ஊழல் "கொரோனாவால அந்த கட்சியோட ஆரோக்கியம் சுத்தமா கெட்டுப்போச்சு. தலைமையை மாத்தி, புது ஆள போடணும்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    குடும்ப தலைமைக்கு காலைபிடிக்க விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எல்லோரும் தனிமரமாகத்தான் இருக்கிறார்கள்.

Advertisement