Advertisement

டவுட் தனபாலு

தி.மு.க., மகளிரணி செயலர், கனிமொழி: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரிய மக்களின் மீது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும், நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. மக்கள் எழுச்சியின் முன், எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை, இந்த அரசுக்கு உணர்த்த உறுதியேற்போம்.


@@@'டவுட்' தனபாலு: துாத்துக்குடி லோக்சபா தொகுதி, தி.மு.க., - எம்.பி.,யான பிறகும் கூட, துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம், அதற்கு காரணமானவர்கள் போன்றவற்றை, உங்களால் சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லையோ என்ற, சாமானியர்களின், 'டவுட்' சரி தானா... இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான் உறுதியேற்பீர்களோ!

தமிழக காங்., தலைவர் அழகிரி:
மத்திய, மாநில அரசுகளின் இலவச மின்சார பறிப்பு நடவடிக்கையை எதிர்த்து, சமூக ஊரடங்கை கடைப்பிடித்து, மே, 26ல், அரசு அலுவலகங்கள் முன், காங்., சார்பில், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
'டவுட்' தனபாலு: கொரோனா என்ற அரக்கனின் பிடியில் சிக்கி, உலக நாடுகள் அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்திலும், அரசியல் நடவடிக்கைகளை, காங்., கைவிடவில்லையே என்ற ஆதங்கம், மக்கள் மனதில் கோபமாக மாறி ஒலிப்பது, உங்களுக்கு கேட்கவில்லையோ என்ற, 'டவுட்' இதனால் எழுகிறது.
முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி:
தி.மு.க.,வில், எதையும் எதிர்பார்க்காமல், நீண்ட காலம் உழைத்தவன். சில ஆண்டுகளாக, அந்த இயக்கம் எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டதோ, அதிலிருந்து மாறிச் செல்கிறது. பா.ஜ., ஹிந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்குமான கட்சி என்பதை உணர்ந்ததால் இணைந்துள்ளேன்.
'டவுட்' தனபாலு: நீங்க சொல்வது எல்லாம் சரி தான். பா.ஜ., இவ்வளவு நல்ல கட்சி என்பதை அறிய, உங்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஆனதோ என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க. மேலும், எல்லா மதத்தினருக்கும், பிரிவினருக்குமான கட்சி என்று சொல்கிறீர்கள். அப்படியே, யார், யாருக்கு எதிரான கட்சி என்பதையும் சொன்னால் தேவலை!
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா

    கொரோனா அரக்கன் இருப்பிடம்(?) தெரிந்தால் அழகிரி அய்யாவிடம் கூறுங்கள். அங்கும் சென்று கறுப்புக்கொடி காட்டுவார்.காங்கிரஸிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? .

  • Aaaaa - Bbbbbb,இந்தியா

    துப்பாக்கி சூடு நடந்ததே அரசுக்கு டீவி மூலம்தான் தெரியவருகிறது. அப்படியென்ன அது ஒரு தூத்துக்குடி ரகசியம்?

Advertisement