Advertisement

மேற்கு வங்கத்துக்கு ரூ.1,௦௦௦ கோடி இடைக்கால நிவாரணம்: மோடி அறிவிப்பு

பாசிர்ஹட் :மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், 'அம்பான்' புயலால் சேதம் அடைந்த பகுதிகளை, பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டர் வாயிலாக, நேற்று பார்வையிட்டார்.
இடைக்கால நிவாரணமாக, மேற்கு வங்கத்துக்கு, 1,000 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு, 100 கோடி ரூபாயும் உதவித் தொகை அறிவித்தார். ''உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தோருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.வங்கக்கடலில் உருவான அம்பான் புயல், கடந்த, 20ல், மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்தது. அப்போது, மேற்கு வங்கத்தில் சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது.

தலா, ரூ.2 லட்சம்மணிக்கு, 190 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், மாநிலம் முழுதும், ௫,௦௦௦க்கும் மேற்பட்ட மரங்கள், தொலை தொடர்பு கோபுரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன; வீடுகளின் மேற்கூரைகள் அடித்து செல்லப்பட்டன. வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மற்றும் மேற்கு மித்னாபூர், கோல்கட்டா, ஹவுரா, ஹூக்ளி ஆகிய மாவட்டங்கள், கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
இந்த கொடூர புயலுக்கு, மேற்கு வங்கத்தில், 77 பேர் உயிரிழந்துள்ளனர். மறுசீரமைப்பு பணிகளுக்கு, 1,000 கோடி ரூபாய் நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளதாகவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

3 சவால்கள்மேலும் அவர் கூறியதாவது:மாநிலத்தில், ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் வேறு மக்களை அச்சுறுத்தி வருகிறது.இதற்கிடையே, அம்பான் புயலால் கடும் சேதங்களை சந்தித்துள்ளோம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், மேற்கு வங்க அரசு, மூன்று சவால்களை ஒரே நேரத்தில் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.மொத்தம், எட்டு மாவட்டங்கள் வரை, கடும் சேதம் அடைந்துள்ளன. 60 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஆறு கோடிக்கும் அதிகமானோர், நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடரில் இருந்து மீண்டு, இயல்பு நிலை திரும்ப, கொஞ்ச காலம் ஆகும்.தொலை தொடர்பு சேவை முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. என் வீட்டு தொலைபேசி மட்டும் வேலை செய்கிறது; ஆனால், 'மொபைல் போன்' வேலை செய்யவில்லை. நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது. மீட்புப் படையினர், போலீசார், அதிகாரிகள், பல்வேறு துறை பணியாளர்களும், இரவு பகலாக உழைக்கின்றனர்.சேதங்கள் குறித்த முதற்கட்ட அறிக்கை தயாராக உள்ளது. மாநிலத்தில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என, கணக்கிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

வரவேற்புஇந்நிலையில், புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று கோல்கட்டா வந்தார். அவரை, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, விமான நிலையத்தில் வரவேற்றார்.பின், பிரதமர் மோடி, முதல்வர் மம்தா மற்றும் கவர்னர் ஜக்தீப் தன்கர் ஆகியோர், ஹெலிகாப்டர் வாயிலாக, சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து ஒடிசாவில், அம்பான் புயல் பாதித்த பகுதிகளையும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் வாயிலாக பார்வையிட்டார்.

விரிவான ஆய்வுபின், மத்திய அரசு சார்பில், இடைக்கால நிவாரணமாக மேற்கு வங்கத்துக்கு, 1,000 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு, ௫௦௦ கோடி ரூபாயும் நிதி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தோருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாயும் உதவித் தொகை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.'சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை, விவசாயம், மின்சாரம் மற்றும் இதர துறைகளில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து, விரிவான ஆய்வு நடத்தப்படும்' என, பிரதமர் தெரிவித்தார்.இதற்கிடையே, காங்., -- எம்.பி., ராகுல் வெளியிட்டுள்ள செய்தியில், அம்பான் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த கடும் நெருக்கடியில் இருந்து, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில மக்கள் விரைவில் மீள, பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் பலி 22அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த, 20ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, அம்பான் புயல், கரையை கடந்தது. 180 முதல், 200 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசி, நாட்டையே புரட்டிப் போட்டது. 26 மாவட்டங்களில், 1,100 கி.மீ., துாரத்திற்கு சாலைகள் சேதமடைந்து உள்ளன; 200க்கும் மேற்பட்ட பாலங்களும், 233 அரசு கட்டடங்களும் சிதைந்துள்ளன. நாடு முழுதும் உள்ள, 3.60 கோடி மின் இணைப்புகளில், இரண்டு கோடி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. மரங்கள் சாய்ந்ததிலும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும், 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.


ஜேஷார் மாவட்டத்தில் மட்டும், அதிகபட்சமாக, 12 பேர் பலியாகி உள்ளனர். வீடுகள், விவசாய நிலங்கள், மின் இணைப்புகள், தகவல் தொழில்நுட்ப கோபுரங்கள், நீர் ஆதாரங்கள், மீன் வளம் மற்றும் கால்நடை துறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சேதங்கள், 1,100 கோடி ரூபாய் வரை இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.

உயிரிழப்பு இல்லாத ஒடிசாஅம்பான் புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரண்டு லட்சம் பேரை, ஒடிசா மாநில அரசு, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியது. இதையடுத்து, அம்மாநிலத்தில், புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என, அரசு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்து உள்ளன; 45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, அரசு குறிப்பு தெரிவிக்கிறது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • ஆப்பு -

  கையிலே என்னவோ நீளமா வெச்சிருக்காரே..... அது என்ன? just curious.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  முஸ்லீம் பேகம் மும்தாஜ் - நான் கேட்டது ரூ 1 லட்சம் கோடி கொடுத்தது ரூ 1000 அதுக்கும் ஆயிரம் அட்வைஸ் வேறே

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  கேக்காமலே ஆயிரம் கோடி.. இங்க ஒருத்தர் வாயில ரெத்தம் வர்றவரை ஐயா நிவாரணத்துக்கு பழைய பாக்கியவாது தாங்கன்னு கதறுறாரு அஞ்சு பைசா நகத்தல...

 • baala - coimbatore,இந்தியா

  பணத்தை கொஞ்சம் சீக்கிரம் கொடுங்க சாமி. வெறும் அறிவிப்போடு விடாமல்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  அங்கு இருக்கும் அந்த முதல்வர் திருமதி பேகம் பிரதமர் வரும் நேரத்தில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும் புகைபபடம் பார்த்தவர்களுக்கு தெரியும், இப்படியும் சில மனிதர்கள், வந்தே மாதரம்

  • Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா

   நேற்று அவருக்கு என்ன மரியாதை அவர்கள் கொடுத்து தான் வீடியோவில் பார்த்தோமே ,

Advertisement