Advertisement

சிக்கிம்மில் ஜூன் 15 ல் கல்வி நிறுவனங்கள் திறப்பு

காங்டாங்: தொற்று இல்லா சிக்கிம் மாநிலத்தில் வரும் 15ம் தேதி முதல் கல்வி நிறுவனங்களை துவக்க அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 4 -ம் கட்ட ஊடரங்கு ஒரு சில தளர்வுகளுடன் வரும் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் இன்று வரையில் கொரோனா தொற்று பாதிப்பில்லாத மாநிலமாக சிக்கிம் மாநிலம் திகழ்கிறது.

இதனிடையே மத்திய அரசின் ஊரடங்கை பின்பற்றி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாநிலத்தில் வரும் ஜூன் மாதம் 15 ம் தேதி முதல் பள்ளி , கல்லூரி, பல்கலை., உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி கே.ஜி., முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலை நேர அசெம்பிளி நடைபெறாது. சனிக்கிழமை தோறும் வகுப்புகள் நடைபெறும். வரும் பிப்., 2021 ம் ஆண்டில் பள்ளி இறுதி தேர்வு நடத்தப்படும்.மேலும் அனைத்து கல்லூரிகளிலும் வழக்கமான வகுப்புகள் நடைபெறும். சமூக இடைவெளி விதிகள் பின்பற்றப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement