Advertisement

பிலிப்பைன்சில் ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா தொற்று

மணிலா : பிலிப்பைன்சில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) மேலும் 163 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பிலிப்பைன்சிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) புதிதாக 163 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,597 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று 11 பேர் பலியாகினர். இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 857 ஆக உள்ளது. 3000 க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்ததாக கூறப்படுகிறது.

நாட்டில் நோய் தொற்றுகளை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. வெளி நாடுகளில் இருந்து வரும் பிலிப்பைன்ஸ் மக்களால் நோய் தொற்று மீண்டும் பரவுமா என அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement