Advertisement

அ.தி.மு.க.,ஆட்சி தொடர மக்கள் விருப்பம்: ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்.,

சென்னை : 'தமிழக மக்கள், அ.தி.மு.க., அரசே தொடர விரும்புகின்றனர்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., அரசு நான்காம் ஆண்டை நிறைவு செய்து, இன்று ஐந்தாம் ஆண்டை துவக்குகிறது. இதையொட்டி, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒன்றரை கோடி, அ.தி.மு.க., உறுப்பினர்கள் ஒத்துழைப்பாலும், தமிழக மக்களின் பேராதரவாலும், அ.தி.மு.க.,வையும், அரசையும், ஜெ.,வின் நல்லாசியோடு வழிநடத்தி வருகிறோம். அதன் காரணமாக, மத்திய அரசின் நல் ஆளுமை திறனுக்கான தர வரிசையில், தமிழகம் முதலிடம். தமிழகத்தின் நீர் நிலைகளை பாதுகாக்க, குடிமராமத்து பணிகள், சிறப்பாக நடந்து வருகின்றன.


உலக முதலீட்டாளர்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய துாண்டும், பல்வேறு நடவடிக்கைகள், தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. உலகையே அச்சுறுத்தும், கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க, தேவையான மருத்துவ பணிகளில், அரசு முழு மூச்சாக பணியாற்றி வருகிறது.
இவை, மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற, அர்ப்பணிப்பு உணர்வுக்கு எடுத்துக்காட்டுகள். பட்டியலிட அரசின் சாதனைகள், அணிவகுத்து நிற்கின்றன. நாம் செய்திட்ட பணிகள் ஏராளம். இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருந்தாலும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றலும் உண்டு.


ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு, தமிழக உரிமைகளை காப்பதிலும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், ஜெ., வழியில் திறம்பட செயலாற்றும். ஜெ., குறிப்பிட்டதை போல, அ.தி.மு.க., என்னும் ஆலமரம், ஆயிரங்காலத்து பயிராக செழித்து வளரும்.
தமிழக மக்கள், அ.தி.மு.க., அரசை, தங்களின் நலன் காக்கும் அரசாக போற்றுகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் நடக்கும் அரசே, தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

சேலம் சென்றார் முதல்வர் இ.பி.எஸ்.,தமிழக முதல்வர் இ.பி.எஸ்., நேற்று சேலம் சென்றார். சென்னையில் இருந்து, நேற்று மதியம், முதல்வர் இ.பி.எஸ்., காரில் சேலம் சென்றார். இன்று காலை, 10:45க்கு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அலுவலர்களுடன், ஆய்வு கூட்டம் நடத்துகிறார். மாலை, முகாம் அலுவலகம் திரும்புகிறார்.
அதன்பின், எடப்பாடி பயணியர் மாளிகையில், மாவட்ட அலுவலர்களுடன், ஆலோசனை நடத்துகிறார். நாளை மதியம், சேலத்தில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக காரில், சென்னை வருகிறார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (48)

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  ஆனால் நீங்க அதை விரும்பவில்லை போலிருக்கிறதே? உங்க ஆட்சியின் கொரோனா நடவடிக்கை அப்படிதான் இருக்கிறது.

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  நான் அறிந்த மொழிகளிலே என மஹாகவி பாடியதுபோல், நான் அறிந்த வகையில், நாணயம் செயலாகவும், முழுமையாக மாற்றத்தக்கதாகவும் 'சிந்தாமல் சிதறாமல்' 'இன்னாருக்கு இன்னாராகவே' செல்வதால் 'அம்மா'வின் ஆட்சி இனி தொடர்கதைதான்

 • periasamy - Doha,கத்தார்

  கடந்தமுறை ஜெயாவிற்கு மக்கள் ஒட்டுப் போட்டார்கள் இந்த முறை உங்கள் இருவருக்கும் பினாயக் தொகை கூட திரும்ப கிடைக்கப் போவதில்லை

 • m.viswanathan - chennai,இந்தியா

  பாத்து பேர் கிட்டே விசாரித்ததில் யாருக்கும் ஆட்சி தொடர விருப்பம் இல்லையாம், இப்ப என்ன செய்விங்க, இப்ப என்ன செய்விங்க

 • Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா

  இந்த மாதத்தின் அழகான ஜோக் எல்லோரும் சிரித்து கொள்ளுங்கள்

Advertisement