Advertisement

தமிழகத்தில் 14,753 பேருக்கு கொரோனா; பலி 98 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 22) மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 14,753 ஆகவும், பலி எண்ணிக்கை 98 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 66 பேர், டில்லியில் இருந்து வந்தவர்கள் 13 பேர், மேற்குவங்கத்தில் இருந்து வந்தவர்கள் 6 பேர், ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் 2 பேர், குஜராத், ம.பி., ஒடிசா, தெலுங்கானாவில் இருந்து வந்த தலா ஒருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவரும் அடங்கும். தமிழகத்தில் மொத்த பாதிப்பு 14,753 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் இருவரும், தேனி, செங்கல்பட்டில் தலா ஒருவரும் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,128 ஆனது. மொத்தமுள்ள 67 ஆய்வகங்கள் மூலமாக ஒரே நாளில் 12,653 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தற்போது 7,524 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Paramasivam - Chennai,இந்தியா

    நேற்று வரை ஈரோடு மாவட்டத்தில் தொற்று இல்லாமல் பச்சை வண்ணத்தில் இருந்தது. ஒரு தப்லீக் ஆல் வண்ணம் மாறிவிட்டது

  • Chandramoulli - Mumbai,இந்தியா

    Oru Koottam tamilakathai naasam seithu vittathu. Mukkiyammaka Chennai Nagaram , narakamaaka maara uthaviya kootankal mikavum santhosamaaka ullanar. Makkal thaan mudivu seiya vum.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    முன்னை இட்ட தீ முப்புரத்திலே. பின்னை இட்ட தீ இலங்கையிலே. அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே. தப்ளிக் இட்ட தீ தமிழகத்திலே. அணைக்க வல்லார் யாரோ?

Advertisement