Advertisement

நொறுங்கியது பாக்.,விமானம்:நுாற்றுக்கும் மேற்பட்டோர் பலி

கராச்சி : பாகிஸ்தானில், 107 பேருடன் பறந்த விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்ததில், நுாற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து, கராச்சிக்கு, 98 பயணியர் உட்பட 107 பேருடன், பி.ஐ.ஏ., எனப்படும், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம், மதியம் புறப்பட்டது, கராச்சி விமான நிலையத்தை, விமானம் நெருங்கியதும், அதில் கோளாறு எற்பட்டது.
இது பற்றி, கராச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்த பைலட், விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டும் எனக் கூறினார்.


இதையடுத்து, கராச்சி விமான நிலையத்தில், விமானத்தை தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விமானம் தரையிறங்கிய போது, எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த பகுதியில் தீப்பிடித்தது. குடியிருப்புப் பகுதி என்பதால் ஆம்புலன்ஸ்கள் செல்வதிலும் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது.


மீட்பு பணியில்,போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


விமானம் விழுந்ததில், 8 - 10 வீடுகள் சேதடைந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் இருந்தவர்கள், இடிந்த வீடுகளில் இருந்தவர்களின் கதி தெரியவில்லை. பெரும்பாலானோர் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இதுவரை, நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில், கொரோனா பரவலால், ஒரு மாததத்துக்கு மேலாக தடை செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை, சில நாட்களுக்கு முன் துவங்கிய நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (28)

  • Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா

    விமான விபத்தின் காரணமாக உயிரிழந்த பாகிஸ்தான் பயணிகள் அனைவரும் சாந்தி அடைய அல்லா அருள் கிடைக்கும். இதன் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை முற்றிலும் வெளியேற்ற வேண்டும்.

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு ,இந்தியா

    கொடுமை

  • anbu - Hamilton,நியூ சிலாந்து

    ஆழ்ந்த இரங்கல்கள. அனைவரின் ஆன்மாவும் சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் அன்பு, நியூ ஸிலண்ட்

  • prem -

    எந்த நாடாக இருந்தாலும் வருந்தத்தக்க செய்தி.....அநேகருடைய கனவுகள் சிதைக்கப்பட்டது .... குடும்பங்கள் உறவுகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்..... சக மனிதராக.

  • Ganesan Madurai -

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சும்மாவா சொல்லிருக்கு. கடைசீல பக்கி முக்கி பாகிஸ்தானிகள் தலையிலேயே விழுந்தது.

Advertisement