Load Image
dinamalar telegram
Advertisement

பூங்காவாக மாறிய குப்பை மேடு

Tamil News
ADVERTISEMENT
குன்னுார்:குன்னுாரில் குப்பை மேலாண்மை பகுதி, பூங்காவாக மாறி வண்ண மயமாக காட்சி அளிக்கிறது.குன்னுார் நகராட்சி, 30 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் ஒட்டுப்பட்டறை அருகே வசம்பள்ளம் பகுதியில் உள்ள குப்பை குழியில், கொட்டப்படுகின்றன.இங்கு, நகராட்சியின் ஒத்துழைப்புடன், 'கிளீன் குன்னுார்' தன்னார்வ அமைப்பு, குப்பையை தனித்தனியாக பிரித்து வருகிறது.இதற்காக நகராட்சி துாய்மை பணியாளர்களுடன் இணைந்து, தன்னார்வலர்கள், 6 பணியாளர்கள் இவற்றை பிரித்து வருகின்றனர். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க, இங்கு குப்பைகூள மேலாண்மை பூங்கா உருவாக்கப்பட்டு, மலர் செடிகள் நடவு செய்யப்பட்டதுடன் புல்தரை அமைக்கப்பட்டது.தற்போது, இந்தபகுதி பசுமையாக காட்சியளிப்பதுடன், மேரிகோல்டு, பிளக்ஸ் உள்ளிட்ட பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குகின்றன.அமைப்பின் தலைவர் சமந்தா அயனா, செயலாளர் வசந்தன் ஆகியோர் கூறுகையில்,''குப்பைகூளம் கொட்டப்படும் இடத்திலும் சூழல் காக்கப்பட வேண்டும். இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் வரும் வாரங்களில் முழுமையாக பூக்கள் பூத்து குலுங்கும்,'' என்றனர்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement