Advertisement

மக்கள் மனசாட்சியோடு நடக்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

சென்னை: 'மக்கள் மனசாட்சியோடு, போலீசாரை எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால் அனைவருக்கும் நல்லது' என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8 மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21 நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே. எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது.


நோய் என்பது இயற்கையாக வருவது. யாரிடமும் சொல்லிவிட்டு நோய் வருவதில்லை. யாரும் நோயை வரவழைப்பதும் கிடையாது. ஆனால் நோய் வந்துவிட்டால் குணப்படுத்துவது அரசின் கடமை. ஏனெனில் ஒவ்வொருவருடைய உயிரும் அரசிற்கு மிக முக்கியம்.


அரசு ஒரு உத்தரவு போடுகிறது என்றால் அது மக்கள் நலன் கருதி தான் என்பதை மக்கள் உணர வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய கடமையை உணர்ந்து, நோயினுடைய தன்மையை, தாக்கத்தை உணர்ந்து, தடை உத்தரவை கடைபிடித்தால் நிச்சயம் கொரோனா தொற்றை தடுக்க முடியும்.


சோதனையான இந்த நேரத்தில் பொதுமக்கள் நோயின் தீவிரத்தை உணர்ந்து கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (64)

 • கூடுவாஞ்சேரி சீனு. -

  மாண்புமிகு முதலமைச்சர் அடங்காத மக்களிடம் கெஞ்சுவதை நிறுத்தி காரியத்தில் இறங்க வேண்டும். கூவத்தூறில் தொடங்கி ஆர் கே நகர் வரை தங்களது திறமையான அணுகுமுறையால் தான் தமிழகம் அந்த மன்னார்குடி மாபியாவிடமிருந்து தப்பியது. அதே போல்வெளியில் தெரியாமல் காவல்துறை மூலமாக ஜமாஅத் ஜிகாதிகளை கட்டுக்குள் கொண்டு வாருங்கள். கொரோனாவும் கட்டுக்குள் வந்துவிடும். ஜிகாதிகளும் அடங்கிவிடுவர்.மயிலே மயிலே என்றால் இறகு போடாது. தமிழகம் பிழைக்கும்.

  • தமிழ் -

   கூவத்தூர்ல இவங்க அடிச்ச கூத்துதான் எல்லாருக்கும் தெரியுமே. ஒருவேளை உனக்கு தெரியாதா.

 • RajanRajan - kerala,இந்தியா

  மனசாட்சியை கூறு போட்டு விற்று கூவத்தூர் கூத்தடிச்சவங்க எல்லாம் இன்னிக்கு மத்தவங்களை மனசாட்சி படி நடக்க சொல்லுறாங்க கொஞ்சம் கூட வெட்க படாமல். என்ன ஒரு ஜென்மமடா இதுங்க. மனசாட்சியை தியாகம் பண்ணி எத்தனை குதிரை பேரம் ஓட்டுக்கு லஞ்சம் வேலைநியமனத்திலே லஞ்சம் வேலை இடமாற்றத்தில் லஞ்சம் ஊழியர்களின் பதவி உயர்வுக்கும் லஞ்சம் இப்படி ஒரு ஆட்சி செய்யும் செய்த நீங்களா இன்று மனசாட்சி பற்றி விளம்புகிறீர்கள். மகா வெட்க கேடு. உங்களை பார்த்து அந்த கொரானவே வெட்க பட்டு ஆர்பாரிக்கின்றது என்றால் மிகையாகாது. கர்மவினை யாராலும் தட்டி பறிக்க முடியாது

  • dandy - vienna,ஆஸ்திரியா

   அடுத்த corona மரண உலக சாதனை டாஸ்மாக் நாடு தான் ...குடி மக்களுக்கு மனசாட்சி இல்லை ..இல்லாவிட்டால் மார்க்க கடைகளில் வரிசையில் நின்று இறைச்சி வாங்குவார்களா ..

 • வால்டர் - Chennai,இந்தியா

  நம்ம டுவிட்டர் புலி சின்ன தலைவலி அதாம்பா டிஎம்கே யூத் விங் செக்ரட்டரி உதயமே ஆக போகாத நிதி எங்கப்பா போய்ட்டாரு? கொரோனால அவனையே காப்பாத்திக்க முடியல, தமிழ்நாட்டை காப்பாத்த போறாராம்.

  • dandy - vienna,ஆஸ்திரியா

   அதாவது ..... உதய நிதி ராதா ரவி மொழியில்

 • RajanRajan - kerala,இந்தியா

  .............

  • dandy - vienna,ஆஸ்திரியா

   டாஸ்மாக் கடைகளை வீதிக்கு வீதி திறக்கவும் ..குடி மக்களுக்கு னாய் எதிர்ப்பு சக்தி உடனடியாக வந்து விடும் ..கூடவே நடமாடும் டாஸ்மாக் சேவை தொடங்கலாம்

  • dandy - vienna,ஆஸ்திரியா

   இலங்கை ..மியான்மார் காவல் துறை மாதிரி நடவடிக்கை எடுத்தால் சில நாடகளில் மார்க்கத்தை கட்டுப்படுத்தலாம் ..கேட்க வேண்டிய கேள்வி உயிர் முக்கியமா ...வாக்குகள் முக்கியமா ...கட்டுமரம் கட்சிக்கு உயிர் முக்கியம் அல்ல இது வரலாறு

 • g.s,rajan - chennai ,இந்தியா

  It is also a surprise and shocking that no politician in India is attacked by the deadly virus Corona.

Advertisement