Advertisement

கொரோனாவில் பலியானோருக்கு சீனாவில் 3 நிமிட அஞ்சலி

பீஜிங்,: கொரோனாவில் பலியானோரை நினைவு படுத்தும் வகையில், அண்டை நாடான சீனாவில் நேற்று, 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


சீனாவில் வூஹான் நகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுதும்பெரும் பாதிப்பு களை ஏற்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும், 81 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 3,300 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனா பாதிப்பிலிருந்து, சீன மக்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர். பல நகரங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, அதனால் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களை நினைவுபடுத்தும் வகையில், சீனா முழுதும், நேற்று காலை, 10:00 மணிக்கு, 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


நாடு முழுதும் முக்கியஇடங்களில் உள்ள தேசியக்கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப் பட்டு, பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பீஜிங் நகரில், முக்கிய தலைவர்களின் இல்லங்கள் அமைந்துள்ள ஜோங்னான்ஹய் என்ற இடத்தில், அதிபர் ஜின்பிங், பிரதமர் லி கெஜியாங் மற்றும் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்கள், தலை வணங்கி மவுன அஞ்சலி செலுத்தினர். தங்கள் உடைகளில், வெள்ளை நிற ரோஜாப் பூக்களை அணிந்திருந்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    கொன்னால் பாவம் தின்னால் போச்சு ..

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    அங்கு மவுன அஞ்சலிக்கு எதிர்ப்பு இல்லை.

  • swega - Dindigul,இந்தியா

    நம்ம உடன்பிறப்புக்களுக்கு சீனா 3 நிமிஷம் அமைதியா இருக்க சொன்னாலோ அல்லது அவுங்க முதலாளி சமாதில தயிர் வடையும் முரசொலியும் வைத்தாலோ அறிவியல் சார்ந்தது அல்லது மனம் சார்ந்தது. இதே மோடி 5 நிமிஷம் கை தட்ட சொன்னாலோ அல்லது 9 நிமிஷம் விளக்கு பொருத்தசொன்னலோ அது கேலிக்கூத்தானது.

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    இதுதானா பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது?

  • swega - Dindigul,இந்தியா

    இப்படி மூணு நிமிஷம் அமைதியா இருந்தா போன உசிரு திரும்ப வருமா? இது ஒரு மூடத்தனம்னு இப்ப எவனும் பேசமாட்டான்.

Advertisement