Advertisement

கொரோனா கட்டுப்படுத்த 8 தெருக்களுக்கு சீல்

அன்னுார்:'கொரோனா' பாதிப்பைக் கட்டுப்படுத்த, கோவை அருகே அன்னுாரில், எட்டு தெருக்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், அன்னுாரிலிருந்து, கடந்த மாதம், டில்லி மாநாட்டுக்கு ஒன்பது பேர் சென்று திரும்பினர். ஐந்து பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. நேற்று முன்தினம் இரவு, ஐந்து பேரும் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையடுத்து, அன்னுாரில், 10 டாக்டர்கள், 80 செவிலியர்கள், 40 துாய்மைப் பணியாளர்கள் அடங்கிய, 40 குழுக்கள் வீடு வீடாகச் சென்று, இருமல் காய்ச்சல் மூச்சுத்திணறல் உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றன. போலீசார் அன்னுார் நகரில், எட்டு தெருக்களில் நடமாட்டத்தைக் தடை செய்து, சீல் வைத்துள்ளனர்.மெயின் ரோட்டிலிருந்து, பேரூராட்சி அலுவலகம் அருகே பள்ளிவாசல் வீதி செல்லும் வழியை தடை செய்துள்ளனர்.
அக்ரஹார வீதியிலிருந்து, பள்ளிவாசல் வீதிக்கு செல்லும் வழியையும் தடை செய்துள்ளனர். ஓதிமலை ரோட்டிலிருந்து, மார்க்கெட் வீதி செல்லும் வழி உள்ளிட்ட எட்டு தெருக்களை சீல் வைத்து தடை செய்துள்ளனர். தொற்று அறிகுறி உள்ளவர்களின் குடும்பத்தாரிடம், நேற்று மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement