Advertisement

ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு வரும் 25 வரை நீட்டிப்பு

மாட்ரிட்: கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறி இருப்பதாவது:சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல்வேறு நாட்டு மக்களையும் பாதித்து வருகிறது. ஸ்பெயின் நாட்டில் இந்த வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,24,736 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 11,744 ஆக உள்ளது.

நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகமாகி விட்டன. மிகுந்த எச்சரிக்கையுடன் நமது சுகாதார அமைப்பை மீட்க வேண்டிய நேரம் என நம்புகிறோம். மூன்று வார தனிமைப்படுத்தல் நல்ல பலனை தருகிறது என்பதை நாங்கள் அறிவோம். இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி 15 நாள் நாடு தழுவிய அவசர கால நிலை பிறப்பிக்கப்பட்டது. தற்போது அவசர காலை நிலை வரும் 25 ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது.

இரண்டாவது முறையாக அவசர நிலையை நீட்டிப்பது குறித்து பார்லிமென்ட்டில் அனுமதி கேட்கப்படும் என பிரதமர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement