Advertisement

கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்

பரமக்குடி:கொரோனா ஊரடங்கை தொடர்ந்து அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

பரமக்குடி அருகே அரியனேந்தலில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி தலைமையில், எம்.எல்.ஏ., சதன் பிரபாகர் திட்டத்தை தொடங்கி வைத்தார். பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்தாமணி, துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

அப்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு டோக்கன் வழங்கினார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர், ஊராட்சி தலைவர் மணிமுத்து, துணைத்தலைவர் பாப்பா, சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement