Advertisement

காற்றில் பறந்தது சமூக இடைவெளி அறிவிப்பு

ராமநாதபுரம்:ரேஷன் கடைகளில் அச்சமின்றி மக்கள் திரண்டதால் சமூக இடைவெளி அறிவிப்பு காற்றில் பறந்தது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாயும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக டோக்கன் வழங்கி அதில் குறிப்பிட்ட தேதி நேரத்தில் பெற அறிவுறுத்தப்பட்டது. பலருக்கு டோக்கன் வழங்காத நிலையில் நிவாரணத்தொகை பொருட்கள் பின்னர் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இதையடுத்து நேற்று ராமநாதபுரம் வெளிப்பட்டினம் மதுரையார் செட்டியார் தெரு நாகநாதபுரம் உள்ளிட்ட ரேஷன் கடைகளில் மக்கள் திரண்டனர். விற்பனையாளர் சமூக இடைவெளியை கடை பிடிக்க கோரியும் மக்கள் அதனை மீறி கூட்டமாக திரண்டனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement