Advertisement

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய எம்.எல்.ஏ.,

ராமேஸ்வரம்:ஊரடங்கு உத்தரவால் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து திரும்பி செல்ல முடியாத 160 வட மாநில பக்தர்கள், திருக்கோயில் சன்னதி தெரு, பஸ் ஸ்டாண்டில் இருந்த 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் உணவு, உறைவிடம் இன்றி தவித்தனர்.


இவர்களை நகராட்சி கட்டடத்தில் தங்க வைத்தனர்.ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மணிகண்டன், ராமேஸ்வரம் அ.தி.மு.க., நகர் செயலர் கே.கே.அர்ச்சுனன் ஆகியோர் ஆதரவற்றவர்கள், வட மாநில பக்தர்களுக்கு உணவும், பொது மக்களுக்கு ஏராளமான முகக்கவசம் வழங்கினர்.இதில் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் குணசேகரன், அ.தி.மு.க., நகர் பொருளாளர் தர்மர், இளைஞரணி செயலர் மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement