Advertisement

பரமக்குடி கிராமங்களில் சுகாதாரப் பணிகள் மந்தம்

பரமக்குடி:பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் சுகாதாரப்பணிகள் மந்தமாக உள்ளது.

குளோரின் பவுடர், சுண்ணாம்பு தெளித்தல், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் பெயரளவில் நடப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால் ஊர் எல்லைகளில் தடுப்புகள் அமைத்து, கிருமி நாசினி கலந்த தண்ணீர் வைத்து, சோப்பு போட்டு கை கழுவி ஊருக்குள் செல்கின்றனர்.

பரமக்குடி ஒன்றியம் வேந்தோணி ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதி நகரில் மக்கள் கிராம எல்லைக்குள் நுழைய ஒரே ஒரு வழியை மட்டுமே பயன்படுத்துகின்றனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறை, போலீசார் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டு பொது மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement