Advertisement

ஸ்ரீரங்கம் குடும்பத்துக்குநிவாரணம் வழங்கல்

விருத்தாசலம் : கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர விழாவுக்கு வந்து, உணவு கிடைக்காமல் தவித்த ஸ்ரீரங்கம் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.


விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், கடந்த மாதம் 28ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குவதாக இருந்தது. ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுத்து, விழா ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், பங்குனி திருவிழாவில் துப்புரவு பணி செய்வதற்காக, திருச்சி அடுத்த ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர், மணவாளநல்லுாரில் வந்து தங்கினர். ஊரங்கு காரணமாக வேலையின்றி, உணவு கிடைக்காமல் அவர்கள் தவித்தனர்.


தகவலறிந்த தாசில்தார் கவியரசு, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், வி.ஏ.ஓ., ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சென்று, ஜெயின் ஜூவல்லரி நிறுவனம் உதவியுடன், அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement