Advertisement

நடமாடும் காய்கறி கடை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் நடமாடும் காய்கறி கடைகளை எம்.எல்.ஏ., முருகுமாறன் துவக்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் காய்கறி அங்காடியை எம்.எல்.ஏ., முருகுமாறன் துவக்கி வைத்தார். இங்குள்ள 18 வார்டு பகுதிகளில் காய்கறிகள் மக்களை நேரடியாக சென்றடைையும் வகையில் தள்ளு வண்டி, டாடா ஏஸ் வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தாசில்தார் தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆய்வாளர் துரைராஜ், சுகாதார ஆய்வாளர் சாந்தி, வசந்தகுமார், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement