Advertisement

கொரோனா தடுப்பு உபகரணம் குமராட்சி சேர்மன் வழங்கல்

காட்டுமன்னார்கோவில் : குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளுக்காக உபகரணங்களை சேர்மன் பூங்குழலி வழங்கினார்.

குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குமராட்சி ஒன்றிய சேர்மன் பூங்குழலி பாண்டியன் ஒன்றிய கவுன்சிலர்களிடம் முக கவசங்கள், பிளீச்சிங் பவுடர், ஸ்பிரேயர், கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கினார்.பி.டி.ஓ.,க்கள் விமலா, ராஜசேகர், மேலாளர் பார்த்தீபன் ஒன்றிய குழு துணை தலைவர் ஹேமலதா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகன், வசந்தி, சேதுமாதவன், அமுதா ரவிசந்திரன், வெற்றி செல்வி, பாலா, சங்கர், தவசீலன், திரிபுரசுந்தரி முருகானந்தன், புவனேஸ்வரி, மற்றும் நிர்வாகிகள், ஊராட்சி தலைவர்கள் உடன் இருந்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement