Advertisement

மாஸ்க் தயாரிப்பு வீடியோ வைரல்

விருத்தாசலம் : விருத்தாசலம் அ.தி.மு.க., நிர்வாகியின், வீட்டில் இருந்தபடியே மாஸ்க் தயாரிக்கும் வீடியோ வைரலாகிறது.கொரோனா பரவலை தவிர்க்கும் வகையில், கைகளை 20 வினாடிகள் தொடர்ந்து கழுவுதல், முக கசவம் அணிவது, 1 மீட்டர் சமூக இடைவெளி, உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில், முக கவசம் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலானோர் கர்சிப், துண்டு ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.இதை தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே அவரவருக்கு தேவையான முக கவசம் தயாரிக்க முடியும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒன்றை, விருத்தாசலம் அ.தி.மு.க., வட்ட செயலர் அருளாகரன் பதிவிட்டார். அதில், துணிப்பையில் முக கவசம் தயாரிப்பது குறித்து செயல்விளக்கம் கொடுத்துள்ளார்.எளிய முறையில் அனைவரும் தயாரிக்க முடியும் என்பதால், பலரும் பகிர்ந்து வருவதால், வீடியோ வைரலாகி வருகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement