Advertisement

டாஸ்மாக் கடைகளில் வைத்திருந்த சரக்குகள்

கிள்ளை : பாதுகாப்பு கருதி, டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சரக்குகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன், விருத்தாசலம் பண்டக குடோனுக்கு ஏற்றி அனுப்பப்பட்டது.


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு கடந்த 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்கும் வகையில், அத்தியாவசிய கடைகளை தவிர, மற்ற அனைத்து கடைகளும், மூடப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டது. இதனால், குடிபிரியர்கள் கடந்த 10 நாட்களாக சரக்கு அடிக்க முடியாமல் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் சில இடங்களில் திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளது.


இதனால், டாஸ்மாக் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடக்காத வகையிலும், பாதுகாப்பு கருதி கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சரக்குகளும் கடலுார் மற்றும் விருத்தாசலம் குடோன்களுக்கு கடந்த ௨ நாட்களாக லாரி மூலம் ஏற்றி அனுப்பப்பட்டு வருகிறது.முதல் கட்டமாக, கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்டுவருகிறது.அந்த வகையில் நேற்று கிள்ளை, கீழ் அனுவம்பட்டு மண்டபம், கீழச்சாவடி உள்ளிட்ட மூன்று டாஸ்மாக் கடைகளில் இருந்து சரக்குகள், போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி, குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.டாஸ்மாக் கடைகளில் இருந்து சரக்குகள் எடுத்துச்செல்லப்படும் தகவல் பரவியதும், குடிபிரியர்கள் கடையை சுற்றி வட்டமிட்டனர். போலீசார் அவர்களை, விரட்டினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement