Advertisement

துவக்கம்! ரூ.100க்கு 11 வகை காய்கறிகள் தொகுப்பு ....கடலுார் நகரில் வழங்கல்

கடலுார் : கடலுார் நகராட்சி பகுதியில் 11 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு, ரூ. 100 க்கு விற்பனை நேற்று துவங்கியது.


' கொரோனா' வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க, விஸ்தாரமான பொது இடங்களுக்கு மார்க்கெட்டுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருந்தும் சமூக இடைவெளியை மக்கள் முறையாக கடைபிடிக்காமல் மீண்டும் கூட்டமாக கூடினர். இதனை கருத்தில் கொண்டு தோட்டக்கலைத் துறை சார்பில், மாவட்டம் முழுவதும் நகர பகுதிகளில் நடமாடும் காய்கறி கடைகள் அமைத்து வீடுகளுக்கு வந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.


மேலும், கடலுார் நகரில் 11 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு, 100 ரூபாய்க்கு, பொது மக்களுக்கு விற்பனை நேற்று துவங்கியது. கலெக்டர் அன்புச்செல்வன் துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சந்தைக்கு வருவோரின் நேரம் விரயமாதலை தவிர்க்கும் பொருட்டும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலுார் பெருநகராட்சி பகுதியில் 45 வார்டுகளிலும் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.


ரூ. 100க்கு விற்கப்படும் காய்கறி தொகுப்பில், வெங்காயம், தக்காளி தலா 1 கிலோ, உருளைக்கிழங்கு 500 கிராம், கேரட், பீட்ருட், முள்ளங்கி தலா 250 கிராம், சுரைக்காய் 1 கிலோ, இஞ்சி 100 கிராம், பச்சை மிளகாய் 150 கிராம், கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா 1 கட்டு ஆகியன உள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement